வாட்ஸ் அப்பில் சில எண்களில் இருந்து போன் கால்கள் வந்தால் அதை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. நொடிக்கு நொடி புதுமைகள் புகுத்தப்படுகின்றன. அதற்கேற்ப அதில் உள்ள ஓட்டைகள் மூலம் மோசடி பேர்வழிகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாட்ஸ்அப் மோசடி
வீடு புகுந்து கொள்ளையடித்து, ரிஸ்க் எடுத்து வழிபறி நடத்துவதெல்லாம் அந்த காலம். இவை தற்போது தொடர்ந்தாலும் திருட்டு சம்பவங்களில் கூட ஹைடெக் புகுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து எப்படியெல்லாம் பணத்தை சுருட்டமுடியுமோ அப்படி சுருட்டுகிறார்கள்.
தற்போது வாட்ஸ் ஆப்களிலும் அதிக மோசடி நடைபெறுகிறது. பில்லியன் கணக்கான நபர்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் வரும் புதிய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. புகாரின் படி மக்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. அதாவது எத்தியோபிா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிறது.
இந்த அழைப்புகள் வேறு நாட்டு குறியீட்டிலிருந்து வந்தாலும் அது உண்மையில் அந்த நாட்டிலிருந்து வருவது கிடையாது. உங்களுக்கு தெரியாத எந்த சர்வதேச அழைப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது. இது போல் வாட்ஸ் ஆப் அழைப்புகளுக்கான சர்வதேச எண்களை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் பணியில் உள்ளன. உங்களுக்கு இந்த அழைப்புகள் நீல நிறத்தில் தோன்றும்.
இந்த காலை அட்டென்ட் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பெற்று பணத்தை திருடும் மோசடியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். அது போல் பகுதி நேர வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு இந்த கட்டணத்தை செலுத்தினால், ஒரே மாதத்தில் உங்கள் ஊதியத்துடன் இந்த கட்டணமும் திரும்ப செலுத்தப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எதையும் நம்பி பணம் செலுத்திவிட்டு ஏமாற வேண்டாம்.
மேலும் படிக்க
இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் மாற்றம்: இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments