ஒரு காலத்தில் ஊதியம் என்றால், வார ஊதியம்தான். 7 நாட்கள் கடினமாக உழைத்தால், சனிக்கிழமைகளில் ஊதியம் எனப்படும் சம்பளம் வழங்கப்படும்.
இவ்வாறாக மாதத்திற்கு 4 முறை ஊதியம் கிடைக்கும். ஆக வாங்கும் சம்பளத்தை, அடுத்த 7 நாட்களுக்கு பக்குவமாகப் பாதுகாத்தாலே போதும்.
ஆனால் தற்போது வழங்கப்படும் மாதசம்பளத்தை, அடுத்த 30 நாட்களுக்கு பொத்திப் பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது. 24ம் தேதி ஆனாலே, பர்ஸ் காலியாகிவிடும். மாதக் கடைசி என்பது,கையில் காசு இல்லாத வேதனை மிக்க நாட்களாகவே ஓடும். 1ம் தேதியை நோக்கியே ஓடும் வாழ்க்கைதான் அது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது இந்தியா மார்ட் நிறுவனம்.
வார சம்பளம்
இதனால், இனி மாதம் எப்போது பிறக்கும் என்று காத்திருக்கவே வேண்டிய அவசியமில்லை. இனி வாரச் சம்பளம்தான். கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்த ஊழியர்கள் போன்றோருக்கு மாத சம்பளம், தினசரி சம்பளம் இருந்தாலும், மிகப் பெரிய நிறுவனத்தில் வார சம்பள முறையை அமல்படுத்துவது இதுவே முதல் முறை.
புதிய ஊதிய விதி
ஒவ்வொரு வாரத்திலும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கான காசோலை வழங்கப்படும் என்று இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், ”இது ஊழியர்களுக்கு வெகுவாகப் பயனளிக்கும். இதை வைத்து ஊழியர்கள் தங்களது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு, சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அமோக வரவேற்பு
இந்தியாவில் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் நிலையில், இந்தியா மார்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களும் ஒவ்வொன்றாக இதைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...
எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!
தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!
Share your comments