ரேஷன் பொருட்களில் மோசடிகளைத் தடுக்கும் வகையில், இனி அனைத்து ரேஷன் கடைகளிலும், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.
ரேஷன் கார்டுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதிகரிக்கும் மோசடிகள்
ஒருபுறம் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும், இன்னொரு புறம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் மோசடிகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகப் பயனாளிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
விதிமுறைகள் மாற்றம்
இந்நிலையில் மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் முதலில் நீட்டிக்கப்பட்டது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்து, ரேஷன் கார்டுகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை வெளியானது.
அரசு நடவடிக்கை
இந்நிலையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்கப்படும்.
இதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் மோசடிகள் கட்டுப்படுத்தப்படும். அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.
மேலும் படிக்க...
ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
Share your comments