சமீபக் காலமாகத் தொடர்ச்சியாக வங்கிகள் தங்களின் FD-யின் வட்டி விகிதங்களை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நிலையில் எந்தெந்த வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன என்பதையும், புதிய வட்டி விகிதங்களின் பட்டியலையும் இப்பதிவு விளக்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank): இது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான தனது வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. டெபாசிட் காலத்தைப் பொறுத்த வரையில் எஃப்டிகளின் வட்டி விகிதங்களை 10 bps முதல் 25 bps எனும் நிலை வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த புதிய விகிதங்கள் ரூ. 5 கோடி வரையிலான டெபாசிட்களுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஃப்டி விகிதங்களில் திருத்தம் செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் கடன்களின் காலத்தைப் பொறுத்து 6 சதவீதம் முதல் 7.25% வரை வருமானத்தைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விவாசாயிகளுக்கு 3% மானியத்தில் கடன் வழங்கும் புதிய திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank): ஹவுசிங் ஃபைனான்ஸ் என்று பார்க்கும் போது, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களால் செய்யப்படும் நிலையான வைப்பு முதலீடுகளுக்கு அதிக 0.25 சதவீத வருவாயைத் தொடர்ந்து வழங்க இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி பிற கடன் வங்கிகளைப் பின்பற்றி நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. 2 கோடி வரையிலான நிலையான வைப்புகளுக்குச் சமீபத்திய வட்டி விகிதங்கள் பொருந்தும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5 வருடங்கள் முதல் 10 வருடங்களில் முதிர்வடையும் FD-க்கள் மீது பொது மக்களுக்கு 5.75 சதவிகிதம் அதிக வருமானத்தை வழங்குகிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
ஆக்சிஸ் வங்கி (Axis bank): ரூ.50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஒரு ஆண்டுக்கு 3%-ஆக உயர்த்தி உள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மற்றும் ரூ.800 கோடிக்கும் குறைவாக உள்ள சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3.50 சதவீத வருமானத்தை வங்கி வழங்குகிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI): இந்த வங்கியானது, நிலையான வைப்புத்தொகைக்கான வருமானத்தை 20 அடிப்படை புள்ளிகள் எனும் நிலை வரை அதிகரித்துள்ளது. மீண்டும் வருமானம் வைப்புத் தொகையின் காலத்தைப் பொறுத்தது. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்குப் புதிய விகிதங்கள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Share your comments