பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அதிசயம்தான். ஏனெனில் அவர்கள் இருவரும், ஒரேமாதிரியான தோற்றத்துடன் இருப்பதுடன், ஒவ்வொரு அசையும் ஜெராக்ஸ் காப்பியாகவே இருக்கும்.
ஆச்சர்யத்தின் உச்சம் (The pinnacle of surprise)
இதனால் ஒரு இடத்தில் இடத்தில் இரட்டையர்கள் இருக்கிறார்கள் என்றாலே அங்குக் கூட்டமும் கூடும். அந்தக் கூட்டத்தினர் வியப்படைவதும் இயல்பான ஒன்று.
அப்படி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் பிறந்த நேரம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 15 நிமி, இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்து, இந்த இரட்டையர் உலக மக்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.இந்த அதிசய நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அரங்கேறியுள்ளது.
நேரம் வித்தியாசம் (Time difference)
கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல், ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இது சாதாரண நிகழ்வு என்றாலும், குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது.
அதாவது முதல் குழந்தை 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு விய12 மணிக்கும்(2022ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி) பிறந்துள்ளது. இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வருடமே மாறிப்போய் உள்ளது.
அரிதான நிகழ்வு (Rare event)
இந்த அரிதினும் அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாத்திமாவுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் கூறுகையில், 'இது எனது பணிக்காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்' என தெரிவித்துள்ளார்.
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி
குழந்தைகளைப் பெற்றெடுத்த பாத்திமா கூறுகையில், தனது இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியைத் தருவதாக அவர் கூறினார். அதிசயங்கள் எப்போதாவது நிகழ்வது உண்மைதான். இந்த சம்பவமும் அப்படியொரு அதிசயம்தான்.
மேலும் படிக்க...
Share your comments