உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி (Mother Language) இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்ரவரி 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்மொழி தினம் (Monther Language Day)
உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர்.
உலகில் 94 நாடுகளில் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர். இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகள் பலவற்றில் இன்று தமிழர்கள் குடியேறி, வாழ்ந்தும் பல சாதனைகள் புரிந்தும் வருகின்றனர். நாட்டின் உடன் பிறப்புகளோடு உறவாட இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய் மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழர்களோடு தமிழில் உரையாடி தாய் மொழியை வளர்ப்போம்.
மேலும் படிக்க
தமிழ் நூல் எழுதிய சீன நாட்டைச் சேர்ந்த பெண்!
இந்த நாட்டில் வாரத்திற்கு நான்கு நாள் தான் வேலையாம்: சூப்பர் அறிவிப்பு!
Share your comments