1. வெற்றிக் கதைகள்

நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து 5 லட்சம் வென்ற பெண் விவசாயி

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது, இந்த பரிசு தற்போது வழங்கப்பட்டுள்ளது. 26.01.2023 அன்று இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.01.2023 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி க.வசந்தா என்பவருக்கு தமிழ்நாட்டில் 2021-2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான, திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றமைக்காக ரூ.5 லட்சத்திற்கான பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்களிடம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியகரத்தில்,க.வசந்தா அவர்கள் பரிசுக்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வில் வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி,துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, வேளாண் துணை இயக்குனர்கள் வி.எம்.ரவிச்சந்திரன், எம்.மரியரவி, ஜெயக்குமார், வேளாண் உதவி இயக்குனர்கள் ஆ.பழனியப்பா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது எப்படி?

நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். எங்களது குடும்பம் விவசாய பின்னணி கொண்டதாகும். எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. விவசாயத்தை நானும், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கவனித்து வந்தோம். இயற்கை உரம் திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிகளை செய்தோம். இதற்காக நாற்றாங்கால் விதைகளும் அவர்களது அறிவுரைப்படி செய்யப்பட்டது. நாற்று நடவு செய்தபின்னும் தொடர்ந்து அவர்களது அறிவுரைப்படி உரமிட்டு கவனிக்கப்பட்டது. இயற்கை உரம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வேப்பங்கொட்டையை அரைத்து பொடியாக்கி பயன்படுத்தப்பட்டது.

மலைப்பகுதியில் உள்ள தழைகளையும் தண்ணீரில் கலந்து உரமாக பயன்படுத்தினோம். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்திய உரங்களும் இடப்பட்டன. இதனால் நோய் தாக்குதல் இன்றி நல்ல மகசூல் கிடைத்தது. இந்த விருதை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கடினமாக உழைத்தால் பயன் இருக்கத்தான் செய்யும். விவசாயத்தில் நல்ல லாபமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2 முறை முயற்சிக்கு பின் வெற்றி

வசந்தாவின் கணவர் கணேசன் கூறுகையில், ''இந்த விருதை பெறுவதற்காக ஏற்கனவே கடந்த 2 முறை முயற்சி செய்தோம். ஆனால் சரியான சாகுபடி இல்லை. கடந்த 2021-ம் ஆண்டில் இதற்காக முயற்சி செய்து பதிவு செய்தோம். 6 ஏக்கர் பரப்பளவில் சி.ஆர்.1009 சப்-1 எனும் ரக நெல்லை நடவு செய்தோம். 2½ ஏக்கரில் 14 ஆயிரத்து 451 கிலோ 25 கிராம் மகசூல் கிடைத்தது. மாநிலத்தில் வேறு எவரும் இதுபோல் உற்பத்தி செய்யவில்லை. இந்த அறுவடையானது கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதற்கான விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரக அரிசியானது இட்லி அரிசி வகையை சேர்ந்ததாகும்'' என்றார்.

மேலும் படிக்க

மத்திய அரசின் பட்ஜெட் 2023-24: விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மாதக் கடைசியில் குறைந்தது தங்கம் விலை

English Summary: A woman farmer won 5 lakhs to become the first in the state in paddy cultivation Published on: 31 January 2023, 03:31 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.