1. வெற்றிக் கதைகள்

Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Cultivation of Spirulina

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் தாலுகாவிலுள்ள அயலூர் பகுதியில் ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார் பொன்னுச்சாமி. கிரிஷி ஜாக்ரன் குழு, சமீபத்தில் அவரை சந்தித்து ஸ்பைருலினா வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

2010 ஆம் ஆண்டு MCA பட்டம் பெற்று சுமார் 3 ஆண்டுகள் ஐடி துறையில் வேலை செய்து வந்துள்ளார், பொன்னுச்சாமி. ஐடி துறைக்கு மாற்றாக வேளாண் தொடர்பான ஏதேனும் தொழிலில் ஈடுபடலாம் என முடிவெடுத்த காலத்தில் ஸ்பைருலினா வளர்ப்பு பேசுப்பொருளாக இருந்துள்ளது.

ஸ்பைருலினா வளர்ப்பு குறித்து பயிற்சி:

வேலையில் இருந்துக்கொண்டு ஒரு ஆண்டுக்காலம் ஸ்பைருலினா வளர்ப்பு குறித்த தகவல்களை பொன்னுச்சாமி திரட்டி வந்துள்ளார். மைசூரிலுள்ள CFTRI-ல் மூன்று நாட்கள் சுருள்பாசி வளர்ப்பு குறித்து முறையான பயிற்சிகளை பெற்றுள்ளார். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிகண்ட வேல் அவர்களும் இதுக்குறித்தும் பல தகவல்களை வழங்கியுள்ளார்.

ஸ்பைருலினா ஒரு அதிகப்படியான புரதம் அடங்கிய மூலமாகும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகமாக உள்ளது. நமது நாட்டிலும் இதற்கான சந்தை நல்ல நிலையில் இருந்ததையடுத்து சுருள்பாசி வளர்ப்பில் ஈடுபட தொடங்கினேன்” என நம்மிடம் பேச ஆரம்பித்தார் பொன்னுச்சாமி.

சுருள்பாசி வளர்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் சிறுத் தொட்டியில் கூட தொடங்கலாம். ஆனால், உங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய அளவிற்கு இருக்குமா என்றால் அது சந்தேகமே. அதனால், குறைந்தது மாதத்திற்கு 100 கிலோ அறுவடை செய்து- அதனை மதிப்புக் கூட்டு முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபம் பார்க்கலாம்” என்றார்.

உதாரணத்திற்கு 100 கிலோ எடுக்க வேண்டும் என்றால், அதற்கான முதலீட்டு கட்டமைப்பு செலவு குறைந்தது 15 லட்சம் வரை (one time investment) ஆகும். நீங்கள் போட்ட பணத்தை ஒரு மூன்று ஆண்டுகளில் எடுக்க வேண்டும் என நினைத்தால், கிலோவிற்கு ரூ.300 எனவும், அதுப்போக ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு ரூ.350, பணி ஆட்கள் ஊதியம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு மொத்த விற்பனையில் ஒரு கிலோ சுமார் ரூ.700- 800 என விற்றால் லாபம் பார்க்கலாம்."

"அதையும் நீங்கள் மாத்திரை வடிவில், அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களின் வாயிலாக என ஸ்பைருலினாவினை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது” எனவும் ஸ்பைருலினா பிசினஸ் குறித்து விரிவாக நம்மிடம் விளக்கினார்.

Read also: 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா?

Raceway Tank முறையில் சுருள்பாசி வளர்ப்பு:

சூரிய ஒளி தான் சுருள்பாசி வளர்ப்புக்கு மூலதனம் என்ற நிலையில், Raceway tank என்ற அமைப்பில் ஸ்பைருலினாவினை வளர்த்து வருகிறார் பொன்னுச்சாமி.

இந்த முறையில் சூரிய கதிர்கள் தண்ணீருக்குள் நல்ல முறையில் ஊடுருவி சுருள் பாசி வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார். மேலும், Agitation process செய்வதற்கு ஆட்டோமெட்டிக் முறையினை நிறுவியுள்ளார். இதனால் வெயில் அதிகமுள்ள நேரங்களில் சுவிட்சினை ஆன் செய்தால் மட்டும் போதும். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை என 10 நிமிடத்திற்கு தொட்டியினுள் Agitation process நடைப்பெறுகிறது. இதனால், ஒரே இடத்தில் சுருள்பாசியினாது தேங்கி விடாமல், கலக்கி விடும் போது பாசியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றார்.

சுருள்பாசி வளர்ப்பு- தண்ணீரின் pH முக்கியம்:

சுருள்பாசி வளர்ப்புக்கு நன்னீர் தான் பயன்படுத்த வேண்டுமா என நாம் எழுப்பிய கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் போர்வெல் தண்ணீரை கூட பயன்படுத்தலாம். தண்ணீரின் pH தன்மைக்கு ஏற்றவாறு உள்ளீடு செய்யும் உப்புகளின் விகிதத்தன்மை மாறும். pH தன்மை 8.5-க்கும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் தான் தாய் சுருள்பாசியினை தண்ணீரில் விட வேண்டும். அவற்றுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், சுருள்பாசியுடன் மற்ற ஆல்கைன்களும் வளர வாய்ப்புள்ளது” என்றார்.

சுருள்பாசி வளர்ப்பிற்கென தனியாக எவ்வித மானியத்திட்டங்களும் இல்லை. ஆனால், அதே சமயத்தில் MSME திட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கான பிரிவில் அரசின் கடனுதவியினை பெற இயலும் எனவும் தெரிவித்தார். ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர், சந்தை மற்றும் தொழில் ரீதியாக பொன்னுச்சாமி அவர்களை கீழ்காணும் எண் மூலம் தொடர்புக் கொள்ளலாம். ( தொடர்பு எண்: பொன்னுசாமி- 99425 72618)

Read more:

20 ஆண்டுகளாக KVK மூலம் தொடர் பயிற்சி- முன்னோடி விவசாயியாக திகழும் ஒண்டிமுத்து!

ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!

English Summary: Benefits in Raceway Tank method Cultivation of Spirulina Published on: 31 March 2024, 12:32 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.