1. வெற்றிக் கதைகள்

கத்தரிக்காய் நாற்று உற்பத்தியில் புதுமை! - "குழித்தட்டு நாற்றங்கால் வளர்ப்பு"

Daisy Rose Mary
Daisy Rose Mary

நாற்று இறப்பு மற்றும் நாற்றுகள் தட்டுப்பாடு போன்ற இரட்டை சிக்கல்களைச் சந்திக்க, புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் மையம், விவசாயிகளுக்கு குறிப்பாக பண்ணை பெண்களுக்கு உதவ முன் வந்தது. காய்கறி நாற்று உற்பத்தியின் நவீன தொழில் நுட்பமாக குழித் தட்டு நாற்றங்கால் வளர்ப்பு குறித்து வேளாண் விரிவாக்க வல்லுநர் முனைவர் சிவபாலன் மற்றும் அப்போதய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம் ஆர் லதா அவர்களின் முயற்சியால் கள பயிற்சி அளிக்கப்பட்டது.

கத்திரிக்காய் நாற்று உற்பத்தி

திருமதி.எஸ்.சித்ரா (வயது 42),  புதுக்கோட்டை மாவட்ட வடகாடு கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி. அவர், கத்திரிக்காய் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார். நாற்று உற்பத்தியில் குழித்தட்டு நுட்பத்தை பின்பற்றுவதன் மூலம், இடைவெளியை நிரப்பும் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக ரூ.3000 சேமித்தார். வீரிய நாற்றுகள் மூலமாக உற்பத்தியும் அதிகரித்து கூடுதல் லாபம் கிடைத்தது.

நீங்கிய நாற்று தட்டுப்பாடு

பிற நன்மைகளாக நாற்றுகள் சரியான நேரத்தில் கிடைப்பது மற்றும் நாற்று இறப்பு குறைதல் ஆகியவை இருந்தன. தனிப்பட்ட பயன்பாடு தவிர, அதிகப்படியான மிஞ்சிய நாற்றுகளை ஒரு நாற்றுக்கு ரூ.1 என்ற விகிதத்தில் விற்கத் தொடங்கினார், இது அவருக்கு நல்ல வருவாயைப் பெற்றுத்தந்தது. கத்திரிக்காய் நாற்றுகளை தயார் செய்து விற்பனை செய்வதை ஒரு தொழிலாக செய்ய முடிவெடுத்து 2018 ஆம் ஆண்டில், கத்திரிக்காய் சாகுபடி பருவத்தில் குழித்தட்டு நாற்றுகளை விற்று ரூ.60,000 வரை வருவாய் ஈட்டினார்.

நவீன தோட்டக்கலை தொழில்நுட்ப தூதர்

வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சியின் போது, குழி தட்டில் ஊடகங்களில் நிரப்புதல், காய்கறி விதைகளை தேர்வு செய்தல் போன்றவற்றை கற்று தேர்ந்த அவருக்கு தோட்டக்கலை துறை மூலமாக நிழல் கூடத்திற்கான மானியம் கிடைத்தது. தெளிப்பான் மூலம் தெளிப்பு நீர்ப்பாசனம் முறையை அறிமுகப்படுத்தி நீர்ப்பாசனத்திற்கான செலவினத்தையும் குறைத்துள்ளார். தற்பொழுது கடின உழைப்பு மற்றும் நவீன தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பின்பற்றுவதன் காரணமாக திருமதி எஸ். சித்ரா. அவர்கள் தோட்டக்கலை தொழில்நுட்பங்களை மற்ற விவசாயிகளுக்கு பரப்புவதற்கான தொழில்நுட்ப தூதராக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பல விவசாயிகள் அவரது பண்ணைக்குச் சென்று தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு வருகின்றார்.
(மேலும் விவரங்களுக்கு திருமதி எஸ்.சித்ரா, வடகாடு கிராமம், புதுக்கோட்டை. மொபைல்: 8124372518).

தகவல்

முனைவர் எம் ஆர் லதா
இணை பேராசிரியர் மண்ணியல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோவை

கே. சி. சிவபாலன்
வேளாண் ஆலோசகர்,திருச்சி
அலைபேசி :9500414717 

மேலும் படிக்க.....

உபரி வருமானத்திற்கும், உடல் நலத்திற்கும் இயற்கை விவசாயமே உகந்தது!

பால் விற்று ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி!

English Summary: Chitra, a successful farmer Innovation in eggplant seedling production on Pit Nurser Published on: 26 June 2021, 09:46 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.