தமிழ்நாட்டின் செழுமையின் அடையாளமாக இருக்கும் பசுமையான வயல்களுக்கு மத்தியில், நவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள மஹிந்திரா பிராண்ட் விவசாய வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளின் மீது தமிழக விவசாயிகள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். தங்களது விவசாய பணிகளை எளிமைப்படுத்தும் சிறந்த பங்குதாரராக மஹிந்திராவினை அடையாளம் காட்டுகின்றனர்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பகுதியில் விவசாயம் என்பது மனிதர்களின் பெரும் உழைப்பு, நேரம் மற்றும் நிதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் இயங்குகிறது. சுழற்சி முறையிலான விவசாயம், புதிய தொழில்நுட்பத்துக்கான அவசரத் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மஹிந்திரா தங்களின் தேவையினை பூர்த்தி செய்வதோடு, லாபத்தை அதிகரிக்கவும் உதவியாக உள்ளதென விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு:
தென்னை மற்றும் வாழை சாகுபடியில் ஈடுபடும் சேனாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி விக்னேஷ் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் அனைத்து செயல்முறைகளும் மனிதவளத்தை நம்பியிருந்தன. ஆனால் காலப்போக்கில் அதிகரித்து வரும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் விவசாய கூலிப்பணிக்கு அதிகப்படியான ஊதியம் போன்ற செலவுகளை சமாளிக்க மஹிந்திரா மினி டிராக்டர் உதவியாக உள்ளது. பல்வேறு பிராண்டுகளின் விவசாய வாகனங்களைப் பயன்படுத்தி வந்தாலும், மஹிந்திரா தனித்து நிற்கும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது” என்றார்.
தமிழ்நாட்டில் நெல், கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. நிலத்தை உழுவது முதல் விதைத்தல், தெளித்தல், களையெடுத்தல், தழைக்கூளம் மேற்கொள்ளுதல் போன்ற அனைத்து வகையான விவசாய நடவடிக்கையும் மஹிந்திரா டிராக்டர்களால் ஆதரிக்கப்பட்டு வலுவூட்டப்படுகிறது. இப்பணிகளின் வாயிலாக விவசாயிகளின் கணிசமான சேமிப்பிற்கும் மஹிந்திரா உறுதியளிக்கிறது.
பட்டக்காரனூர் பகுதி பள்ளிவளையத்தை சேர்ந்த வாழை விவசாயி திருமூர்த்தி கூறுகையில், ''உழைப்பிற்கு செலவிடும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை டிராக்டருக்கு எரிபொருளாக செலவிடுகிறேன். சேமிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதோடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது” என்றார்.
உழவருக்கு முன்னுரிமை:
ஒவ்வொரு மஹிந்திரா டிராக்டரும் பல்நோக்கு கனரக திறன்களின் பண்பை பெற்றிருந்தாலும், விவசாயிகளின் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதே மஹிந்திராவை சிறந்த பங்குதாரராக உணர வைக்கிறது. 'உழவருக்கு முன்னுரிமை' (Farmer First) என்கிற கோட்பாடு தான் மஹிந்திரா நிறுவனத்திற்கும், தனிப்பட்ட விவசாயிகளுக்கும் இடையிலான பிணைப்பினை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.
விவசாயி விக்னேஷ் கடந்த காலத்தில் வேளாண் பணி மேற்கொள்ளும் போது கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டுள்ளார். மஹிந்திரா டிராக்டருக்கு மாறியது உடல்நல பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளது.
"மஹிந்திரா தொடர்பான இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. 10 மணி நேர ஷிப்ட் வேலை செய்த பிறகும் எனக்கு உடல் வலி ஏற்படவில்லை” என்றார் விக்னேஷ்.
Read also: மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?
நன்மதிப்பை பெற்ற மஹிந்திரா ரோட்டாவேட்டர்:
தமிழ்நாட்டின் விவசாயிகள் மஹிந்திரா டிராக்டர்கள் மற்றும் அவற்றின் பல்வேறு வகையான கருவிகளால் பெரிதும் பயனடைந்துள்ளனர். குறிப்பாக மஹிந்திராவின் விவசாய உபகரணங்களில், தமிழக விவசாயிகள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது மஹிந்திரா ரோட்டாவேட்டர். இது நிலத்தை உழுவதற்கும், அறுவடைக்குப் பின் விவசாய கழிவுகளை அகற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி தன்ராஜ் இதுக்குறித்து கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் அறுவடை மற்றும் வயல்களை சுத்தம் செய்ய, 60000 ரூபாய் வரை பணியாட்களின் கூலிக்கு செலவு செய்தேன். இப்போது நானே அந்த பணிகளை மேற்கொள்கிறேன், அதுவும் எவ்வித செலவும் இல்லாமல்”.
தமிழ்நாட்டின் விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அவர்களின் தொடர்ச்சியான வேளாண் பணிகளில் உட்புகுத்துவதில் சிறந்து விளங்குபவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். மஹிந்திரா இத்தகைய விவசாயிகளுடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறது.
Read also:
கருகும் தென்னை- மரத்துக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க MP அன்புமணி கோரிக்கை
ஆட்டுக் கொல்லி: செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவச தடுப்பூசி!
Share your comments