உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இங்கு, தன் வயிற்றுப் பிழைப்புக்காக வாய்க்கால் வரப்பு வெட்டி, நாற்று நட்டு மழலை மாறாமல் அழகாக விவசாயம் செய்து வருகிறார் ஒரு குட்டி விவசாயி!
நான் பிரகதீஸ்..., தஞ்சையில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறேன். என் அப்பா முகுந்தன், அம்மா வரலட்சுமி. திருவையாறு பக்கத்துல இருக்கிற மானாங்கோரை தான் என் கிராமம். ரொம்ப வருஷமா மழை இல்லாலததால எங்க அப்பா வேறு வேலை தேடி வெளிநாட்டில் இருக்கிறார். நானும் அம்மாவும், தாத்தா-பாட்டியுடன் இருந்து வருகிறோம்.
இந்த கொரோனா காலத்துல அப்பாவால பணம் அனுப்ப முடியலை, ஃபிளைட் இல்லாததால ஊருக்கும் வர முடியல. இந்த வருஷம் காவிரி ஆத்துல இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால அம்மா விவசாயம் செய்ய முடிவு பண்ணாங்க. எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நிலத்துல பாட்டி தான் விவசாயம் செஞ்சிட்டு இருந்தாங்க. இப்போ வயித்து பொழப்புக்காக அம்மா விவசாயம் செய்யலாம்னு சொன்னாங்க..
இந்த கொரோனா ஊரடங்கால அம்மாவுக்கு துணையா வேலை செய்ய யாரும் வரல. பாட்டிக்கும் உடம்புக்கு முடியாததால அம்மா மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வந்தாங்க. அப்போ தான் நானும் அம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.
மெது மெதுவாக அம்மா சொல்லிக்கொடுக்க வாய்க்கால் வரப்பு வெட்டவும், நாற்று நடவும், பூச்சி மருந்து தெளிக்கவும், களை பறிக்கவும் என அனைத்தையும் கற்றுக்கொண்டு நான் இப்போது ஒரு குட்டி விவசாயி ஆகிவிட்டேன். நான் பெரியவன் ஆனதும் விவசாயம் படித்து பெரிய விவசாயி ஆவதே என் லட்சியம்.
பிரகதீஸின் தாய் வரலட்சுமி தெரிவிக்கையில்
இத்தனை ஆண்டுகள் மாமியார் பார்த்து வந்த விவசாயத்தை, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் இந்த ஆண்டுதான் முதன் முதலாக விவசாயம் பார்ப்பதாகவும், கணவரும் வெளிநாட்டில் இருக்க, ஊரடங்கு காலத்தில் எப்படி விவசாயம் செய்வது என தவித்து வந்த தனக்கு தனது மகன் பேருதவியாக இருந்தான் என தெரிவிக்கும் வரலட்சுமி, தனது மகன் ஆசைப்படியே அவனை விவசாயம் சார்ந்த படிப்பு படிக்க வைப்பேன் என தெரிவித்தார்.
தாத்தா சுப்பிரமணியம் கூறுகையில்,
விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறுகையில், தன் பேரன் பிரகதீஸ் விவசாயம் படித்து பெரிய விவசாயி ஆகப்போவதாகத் தெரிவித்தது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆம், மழலை பருவத்திலேயே நம் விவசாயத்தை கற்றுக்கொடுத்தால் நம் நாடும் விரைவில் வல்லரசாகிவிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை!! விவசாயம் பழகுவோம்..!!
மேலும் படிக்க...
Amazon pay-யில் LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 தள்ளுபடி! ஆக.31வரை மட்டுமே!!
மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : பயனடைய அமைச்சர் அழைப்பு!!
கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!
Share your comments