விவசாயத்திலும் அதிக லாபம் எதிர்பார்த்து ரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற நினைக்கும் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மட்டுமே கருந்தில் கொண்டு விலை உயர்ந்த முந்திரி சாகுபடியை இயற்கை முறையில் சாகுபடி செய்து லாபம் பார்த்து வருகிறார் ராமராஜன் (Ramarajan) அவர்கள்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமராஜன், கிருஷி ஜாக்ரன் நடத்தும் ''Farmer the Brand'' நிகழ்ச்சி மூலம், தனது இயற்கை முந்திரி சாகுபடி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். விடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள்!
ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி
ஆண்டாண்டு காலமாக இயற்கை முறையில் மட்டுமே முந்திரி சாகுபடியை மேற்கொண்டு, உழவு இன்றி, ரசாயன மருந்து இன்றி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காய்த்து வந்த முந்திரிகளை மொத்த வியாபாரிகளிடம் விற்று வந்துள்ளனர். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் ராமாராஜன், தனக்கு இருந்த 4 ஏக்கரில் பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
அதிக மகசூல் கிடைக்க மருந்துகளை பயன்படுத்த நினைக்காமல் குறைந்த லாபத்திலும் இயற்கை முறையை மேற்கொள்ள திட்டமிட்ட அவர், இதற்காக தேமோர் கரைசல், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி முந்திரி சாகுபடி மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை உரம், உழவு, முறையான தண்ணீர் போன்ற காரணங்களால் தற்போது அதிக மகசூல் கிடைப்பதாவும், ஆண்டுக்கு 2 முறை முந்திரி சாகுபடி செய்யப்படுவதாகவும் கூறினார். இதன் மூலம் 4 ஏக்கருக்கு 16 மூட்டை முந்திரி சாகுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணா பண்ணை
இயற்கை முறையை பின்பற்றி நல்ல முறையில் சாகுபடி செய்தும் இதற்கான போதிய லாபம் கிடைக்கவில்லை என்பதால் தானே உடைத்து விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளார். இதன் மூலம் தனது கிருஷ்ணா இயற்கை பண்ணையின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதாக குறிப்பிடுகிறார் ராமாராஜன்.
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் சொந்தமாக பாக்கொட் தயாரித்து தனது விற்பனையை துவங்கியதாக தெரிவிக்கும் அவர், எதிர்பார்த்த லாபம் மற்றும் வரவேற்பு தனது இயற்கை விசாயத்திற்கு கிடைத்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முந்திரி தரம்
பெரும்பாலும் முந்திரி இயந்திரங்கள் மூலம் தான் உடைக்கப்படுகிறது, மேலும் போர்மா சேர்க்கப்படுகிறது. இதனால் சுவை இருக்கும் என்றும் ஆனால் சத்துக்கள் உறியப்படுகிறது, நாங்கள் முற்றிலும் கையால் உடைத்து, வெயிலில் உலர வைத்து தயாரிக்கிறோம். இதனால் முந்திரியில் இருக்கும் சத்துக்கள் குறைவது இல்லை என்கிறார் ராமாராஜன். எங்கள் இயற்கை முந்திரிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாவும், மக்கள் அதிகபடியானோர் எங்கள் தயாரிப்பை நம்பி வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இயற்கை முந்திரி விலை
முற்றிலும் இயற்கை முறையில் மதிப்பூக்கூட்டப்படுவதால், முழு பருப்பு கிலோ 900 ரூபாய்க்கும், அரை பருப்பு கிலோவுக்கு 800 ரூபாய் என்றும், தூள் பருப்பு கிலோ 500 ரூபாயாகவும் விற்கப்படுவதாக கூறுகிறார். தரமான தயாரிப்பை எதிர்பார்பவர்கள் எங்கள் பொருளை நம்பி வாங்கி வருவதாகவும், தனக்கு சிங்கப்பூர், டெல்லி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஆடர்கள் வருவதாக குறினார்.
1 ஏக்கருக்கு 4 மூட்டை தற்போது கிடைப்பதாகவும், இது நிறைவான வருமானத்தை தருவதாகவும் இனி வரும் காலங்களிலும் இது போன்ற இயற்கை முறையை மட்டுமே கடைப்பிடிக்கபோவதாக பெருமையுடன் கூறுகிறார் ராமாராஜன்.
இது தவிர முந்திரியில் ஊடு பயிராக உளுந்து பயிரிட்டு வருகிறார். மேலும் நீண்ட கால பயிராக நான்கு ஏக்கரிலும் 400-க்கும் மேற்பட்ட தேக்கு மரம் கடந்த ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலமும் வருவாய் கிடைத்து வருகிறது என்றார். விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது இயற்கை விவசாயித்தின் மூலம் நல்ல லாபம் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு
ராமாராஜன்
ஸ்ரீ கிருஷ்ணா இயற்கை பண்ணை
விருதாச்சலம்
தெடர்பு எண் - 7373031083
மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கும் IT அதிகாரி!
ஷேர் மார்க்கெட் டெக்னிக்- விவசாயத்திலும் டபுள் லாபம் ஈட்டலாம்!
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? கைகொடுக்கிறது விஜய் ஆர்கானிக்ஸ்!
Share your comments