ஆசிரியர் பணியை உதறித்தள்ளிவிட்டு முழு நேர விவசாயியாக 30 ஏக்கர் நிலத்தில் தனது பணியை தொடங்கி இன்று 60 ஏக்கராக மாறி ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி உத்தரப்பிரதேசத்தின் அமரேந்திர பிரதாப் சிங் அப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
லக்னோவின் அரசு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தார் அமரேந்திர பிரதாப் சிங். பள்ளி கோடை விடுமுறையின் போது மாநில தலைநகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள பாரபங்கியின் தௌலத்பூர் கிராமத்தில் உள்ள தனது மூதாதையர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கான பணிகளை தொடங்கினார்.
தனது வாழ்வின் திருப்புமுனை குறித்து, அமரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், “பள்ளியில் முழுநேர ஆசிரியராக இருந்த நான் எனது குடும்பத்துடன் லக்னோவில் வசித்து வந்தேன். 2012 கோடை விடுமுறையின் போது, எனது குடும்பத்துக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தேன்,”
"விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம், ஆசிரியர் தொழிலில் கிடைத்த மாத வருமானத்தை விட பல மடங்கு அதிகம்" என்கிறார் அமரேந்திரா. இப்போது அவர் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
கைக்கொடுத்த வாழை சாகுபடி:
”நான் விவசாயத்தில் முதலீடு செய்யும் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த நினைத்தேன். கோதுமை, தானியங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றைப் பயிரிடும் பாரம்பரிய முறையானது, அதிகம் சம்பாதிக்க உதவாது” என்கிறார் அம்ரேந்திரா. கரும்பு பயிரிட்டு பணம் சம்பாதிப்பதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும் என்று அவர் ஆதாரபூர்வமாக கூறுகிறார். இதேபோல், மற்ற இரண்டும் நிதியை மேம்படுத்துவதில் அதிகம் உதவாது.
“எனது வருவாயை அதிகரிக்க விரும்பியதால், வாழைப்பழத்தில் தொடங்கி படிப்படியாக பலன்களைப் பெற்றேன். அடுத்த ஆண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றை வாழைப்பழங்களுடன் சேர்த்து நல்ல பலன்களைப் பெற முயற்சித்தேன்,” என்றார்.
இஞ்சியின் முடிவுகள் போதுமான அளவு ஊக்கமளிக்கவில்லை என்றாலும், மஞ்சள் சிறந்த முடிவுகளை அளித்தது. “மஞ்சள் பயிர் மூலம் கிடைக்கும் வருமானம் வாழைப்பழத்தில் முதலீடு செய்த தொகையை ஈடுகட்டுகிறது. வாழைப்பழம் விற்ற வருமானம் முழுமையான லாபம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆன்லைனில் பயிற்சி:
அவர் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றில் பரிசோதனை செய்தார். சிறந்த விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக அவர் தனது ஆன்லைன் அமர்வுகளை அதிகரித்தார் மற்றும் இறுதியில் ஸ்ட்ராபெர்ரி, கேப்சிகம் மற்றும் காளான்களை தனது திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
அமரேந்திர பிரதாப் சிங், பருவங்களுக்கு ஏற்ப பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர்களை வளர்க்கும் முறையினை கடைபிடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் நஷ்டத்தை சந்தித்தாலும் பின்னர் லாபத்தை சமாளித்தார்.
"ஒரு பயிர் கழிவுகள் அடுத்த பயிருக்கு உரமாக மாறும், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை பாதுகாக்க இது உதவுகிறது," என்கிறார் அம்ரெண்டர்.
அவர் தனது பூர்வீக நிலத்தில் வெறும் 30 ஏக்கருடன் தொடங்கினார், அது இப்போது 60 ஏக்கராக உயர்ந்துள்ளது, அதில் 30 ஏக்கர் சொந்தமாக உள்ளது, 20 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது, மேலும் அவர் சமீபத்தில் கூடுதலாக 10 ஏக்கரை வாங்கினார். இப்போது கொத்தமல்லி, பூண்டு மற்றும் மக்காச்சோளம் ஆகியவையும் அவரது வருடாந்திர பயிரிடப்படும் பயிர்களில் ஒரு பகுதியாகும்.
ஆரம்பத்தில் உறவினர்கள் எதிர்ப்பு:
“எனக்கு உள்ள மொத்த நிலத்தில், 30 ஏக்கர் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிட பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள பாதி கரும்பு, கோதுமை மற்றும் தானியங்கள் பயிரிட பயன்படுத்தப்படுகிறது. மொத்த நிலம் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வணிகத்தை உருவாக்க உதவுகிறது, மேலும் நான் ரூ. 30 லட்சம் லாபம் ஈட்டுகிறேன்,” என்று அம்ரேந்திரா கூறுகிறார்.
"ஆரம்பத்தில், எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விவசாயத்திற்கு திரும்புவதற்கான எனது முடிவை வித்தியாசமாகக் கண்டனர், ஏனென்றால் மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு வேலைகள் மூலம் நல்ல வருமானம் தேடுவார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் நான் வேறு வழியில் நகர்ந்தேன்,”என்கிறார்.
தற்போது கிடைக்கும் நேரத்தில் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக பாடம் கற்றுத்தரும் இந்த ஆசிரியர்- விவசாயத்தில் தேர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தின் மூலம் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து, செழிக்க வழிகாட்டி வருகிறார்.
pic courtesy: TNIE
மேலும் காண்க:
உழவன் செயலியில் புதிய அப்டேட்- கூலி வேலையாட்கள் பிரச்சினைக்கு தீர்வு!
Share your comments