நெய்வேலி அருகே உள்ள வேகாக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (Sakthivel). 30 வயதே நிரம்பிய இவர், பொறியியலில் முதுகலை பட்டம் பெற்று, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். வேலை கல்லூரியில் இருந்தாலும் எண்ணம், சொல், செயல் எல்லாம் தந்தையின் தொழிலான தோட்டப்பயிர் (Horticulture) நாற்றுகளை தயார் செய்வதிலேயே இருந்தது.
இணையத்தில் செடிகள் விற்பனை:
நர்சரியில் புதுமையாகச் செய்ய வேண்டும் என நினைத்த சக்திவேல், சவுக்கு நாற்றுகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிக்குக் கொடுத்து வந்துள்ளார். அதில் நல்ல வரவேற்பை பெற, அடுத்து ஒரு மாற்று முயற்சியாகத் தனியாக நர்சரி (Nursery) செடிகளை விற்க தனி இணையத்தில் தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் பழச் செடிகள், மலர்ச் செடிகள், மூலிகை செடிகள் என 250 வகையான செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.
250 வகையான நர்சரி செடிகள்
தொடக்கத்தில் சவுக்கு கன்றுகளை அதிகளவில் விற்று வந்த இவர், தற்போது மக்களிடம் மாடித் தோட்டம் அமைப்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு, ஒரு மாற்று முயற்சியாகக் குறைந்த விலையில் தரமான செடிகளை ஆன்லைன் (Online) மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். தன் மனைவியின் உதவியுடன் தனியாக ஒரு இணைய தளம் தொடங்கி, பாலீத்தின் பயன்படுத்தாமல் பேப்பர் கப்பில் தேங்காய் நாற்றினை பயன்படுத்தி தரமான 250 வகையான நர்சரி செடிகளை உற்பத்தி செய்து வலை தளம் வழியாக விற்று வருகிறார்.
விற்பனை
நாற்று ஒன்றின் விலை ரூ. 20 என 10 செடிகளை கொரியர் செலவுடன் ரூ. 300க்கு இந்தியா முழுவதும் விற்பனை (Sales) செய்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ‘எங்கும், எதிலும் தனித்தன்மை - தரமான பொருளை நியாயமான விலையில் கொடுப்பதில் உறுதி’ இந்த உயர்ந்த வணிக நெறி இருந்தால் உச்சம் தொடலாம். உச்சம் தொட்ட சக்திவேலுக்கு வாழ்த்துகள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
Share your comments