1. வெற்றிக் கதைகள்

மூச்சு உள்ள வரை விவசாயத்திற்காக போராடுவேன் என்று கண் கலங்கிய கொங்கு விவசாயி பெரியசாமி

KJ Staff
KJ Staff

எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும், பிரச்சனைகள் இருந்தாலும் நாங்கள் விவசாயம் தான் செய்வோம் என்ற பிடிவாதத்துடன்,  தங்களது கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவர் தீத்திபாளையம் பெரியசாமியும் இவர்களில் ஒருவர்.

வி.எல்.பி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்துள்ளார். ஆனால் சிறு வயதிலிருந்தே பெற்றோர்களுடன் தோட்ட வேலை, மாடு மேய்ப்பது என்ற வேலைகளை கற்றுக்கொண்டதால், டிப்ளமோ படித்த பின்பும் ஈடுபாட்டுடன் விவசாயத்தில் நுழைந்தார் பெரியசாமி.

விவசாயத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது. கோரிக்கைளுக்காக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். ஏதாவது ஒரு வகையில் அதிகாரிகளின் பார்வைக்கு மனுவை கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து ,ஆரம்பத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையிலும், பின்பு கொங்கு நாடு முன்னேற்ற கழக விவசாய அணியிலும் இருந்தேன்.

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் சு,பழனிச்சாமி பல கோரிக்கைளுக்காக போராடிக்கொண்டே இருப்பார். நம் அனைவரும் இணைந்து விவசாயத்திற்காக போராட வேண்டும் என்றார். அதில் இருந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தில் இணைந்தேன்.

பல பிரச்சனைகளை எதிர்கொண்டு மகசூல் எடுத்தாலும், விற்பனையில் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. விளைப்பவனுக்கும், வாடிக்கையாளருக்கு இடையில் கை மாற்றி காய்கறிகளை விற்பனை செய்பவர்களுக்கே நல்ல லாபம் கிடைக்கிறது.

ஒவ்வொரு பழங்கள், காய்கறிகளுக்கும் அரசாங்கமே விலை நிர்ணையித்தால் தான் இதற்கு முடிவு கிடைக்கும். மேலும் நிலங்களின் பரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. வீரிய ரகம் போட்டு உற்பத்தி செய்வதால் ஓரளவிற்கு நிலங்களை பாதுகாத்து கொண்டிருக்கிறோம்.

வன விலங்குகள் விவசாய தோட்டத்தை  பாதிக்காமல் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் பாதிப்பால் நஷ்டப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும். 

இன்றைய நிலைமையில் முழுநேர விவசாயத்தில் வருமானமும் இல்லை, விவசாயிகளுக்கு மரியாதையும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் அழிந்து வரும் நிலையில் அடுத்த தலைமுறை தான் இதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பெரியசாமி  கூறினார். இப்படி ஒரு நிலைமையை உருவாக்க ஓய்வூதியம், கடனுதவி, மானியம், அனைத்தும் நேரடியாக விவசாயிகளுக்கே கொடுக்க வேண்டும்.

நமது ஆதிகுடியின் மூச்சான விவசாயத்தை அடுத்த தலைமுறை தான் அழியாமல் காப்பாற்ற வேண்டும். விவசாய கோரிக்கைகளுக்காக எந்த நிலைமையிலும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்ற வேண்டும். விவசாயி என்றாலே தனி மரியாதை அளிக்க வேண்டும். இந்நிலையை உருவாக்க மூச்சு உள்ள வரை பாடு படுவோம் என்று விவசாயி பெரியசாமி கண் கலங்கி கூறினார்.

எத்தனை நஷ்டங்கள், கஷ்டங்கள், ஏற்பட்டாலும் பெரியசாமி போன்ற வெறித்தனமான விவசாயிகள் இருக்கும் வரை விவசாயத்தை யாராலும் வேரோடு அழிக்க முடியாது. விவசாயம் தான் என் உயிர் மூச்சு என்று பல பிரச்சனைகளிலும் தன்னம்பிக்கையை விடாமல்  விவசாயத்தை காப்பாற்ற போராடி கொண்டிருக்கும் பெரியசாமியை போல அணைத்து விவசாயிகளும் விவசாயத்தை ஓர் பிடிவாதமாய் செய்ய வேண்டும்.   

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: success story/ kongu farmer periyaswamy :aggressive farmer, who made farming his life Published on: 31 May 2019, 10:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.