இளைஞர்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறார். உத்திரப்பிரதேசம் லஹிம்பூர் மாவட்ட விவசாயி அச்சல் மிஷ்ரா.
நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து அச்சல் கரும்பு பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளார். அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல விருதுகள் பெற்றுள்ளார். இந்த வருடமும் இவர் விருது பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் அதிக கரும்பு மகசூலை அறுவடை செய்த வகையில் இவருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி பற்றிய எல்லா தகவல்களையும் லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும்,கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்திலிருந்தும் இவர் பெற்றுள்ளார்.
இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் இவர் விவசாயம் செய்துவருகிறார். 2007-08 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச மாநில அளவில் அதிக கரும்பு மகசூலை அறுவடை செய்து முதல் பரிசு பெறுள்ளார். இந்த ஆண்டிலும் இவர் கோ. 0238 ரக கரும்பை பயிரிட்டு 329.60 டன்/எக்டர் என்ற அளவில் மகசூல் எடுத்துள்ளார். இவரது கரும்பு பயிர் 18.50 அடி உயரமும் அதிக எடையும் கொண்டிருந்தது. மிருகக்கழிவுகள் பண்ணைக் கழிவுகள் இரசாயன உரங்கள் மூலம் இவர் இந்த அதிக மகசூலை பெற்றுள்ளார். இவர் மிகக் குறைந்த அளவு பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தி உள்ளார். மறுதாம்பு கரும்பு பயிருக்கு இவர் மக்கின கரும்பு தோகைகளை உரமாக பயன்படுத்துகிறார்.
Share your comments