தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட " தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்கிற (The Elephant Whisperers) ஆவணப்படம் திரையுலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. இதனைப்போல், சிறந்த ஒரிஜினல் இசைக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ”நாட்டு நாட்டு”பாடலும் ஆஸ்கரை வென்றது.
திரையுலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆம் ஆண்டு விருது, அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதில் சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் இந்திய தயாரிப்பான " தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்கிற ஆவணப்படமும், சிறந்த ஒரிஜினல் இசைக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ”நாட்டு நாட்டு” பாடலும் இறுதி தேர்வு பட்டியலில் இடம்பெற்றன. இந்நிலையில் இரு பிரிவிலும் ஆஸ்கர் விருது கிடைக்கப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு இந்திய தயாரிப்பு ஆவணப்படமும், இந்திய தயாரிப்பு முழு நீளப்படமும் இவ்விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆவணப்படம்:
95-வது ஆஸ்கர் அகாடமியின் சிறந்த ஆவணப்படத்திற்கான இறுதி தேர்வு பட்டியலில் ஹாலவுட், ஹவ் டூ யூ மெஷர் எ இயர்?, தி மார்த்தா மிட்செல் எஃபெக்ட் மற்றும் ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் போன்றவற்றுடன் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இடம் பெற்றிருந்தது.
அச்சின் ஜெயின் மற்றும் குனீத் மோங்கா தயாரித்து, கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய 41 நிமிடக் இந்த குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. தாயை இழந்த இரண்டு அனாதை குட்டி யானைகளைத் தத்தெடுத்து அவற்றை பராமரித்து காட்டிற்கும் அனுப்பும் பொம்மன் மற்றும் பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கும்- யானைக்கும் இருந்த உறவின் உணர்வுகளையும் ஆக்கப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் .
ஆவணப்படத்தின் இயக்குனர் இது குறித்து தெரிவிக்கையில், ரகு என்ற யானையின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் விதத்தினையும் 5 ஆண்டுகளாக பின் தொடர்ந்தேன். சுமார் 450 மணி நேர காட்சிகள் படமாக்கப்பட்டன. எந்த காட்சிகளையும் திட்டமிட்ட எடுக்க இயலாது. அழகான தருணங்களுக்காக காத்திருக்க நேர்ந்தது என்றார்.
" தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படமானது, விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் சகவாழ்வின் இதயத்தைத் தொடும் கதை மட்டுமல்ல, இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த ஆவணப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி Netflix-ல் உலகளவில் வெளியானது என குறிப்பிடத்தக்கது. தற்போது 95-வது ஆஸ்கர் அகாடமியில் விருதினை பெற்றதை அடுத்து திரையுலகினர் பலரும் ஆவணப்பட குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படமானது விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் சகவாழ்வின் இதயத்தைத் தொடும் கதை மட்டுமல்ல, இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியத்தையும் காட்டுகிறது.
இதனைப்போல் இந்தியர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் களத்திலி்ருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற ”நாட்டு நாட்டு”பாடல் ஆஸ்கரை வென்றுள்ளது. கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு சந்திரபோஸ் பாடல் வரிகள் எழுதியிருந்தார். விருதினை இருவரும் பெற்ற நிலையில் இந்திய திரை ரசிகர்கள், திரையுலக கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க:
ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- அரசு வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்
Share your comments