1. வெற்றிக் கதைகள்

சோலார் ட்ரையர்களைப் பயன்படுத்தி மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் மலர் விவசாயி

Daisy Rose Mary
Daisy Rose Mary
வாடும் பூக்களை கொண்டு லட்சத்தில் சம்பாதிக்கும் ஷிவ்ராஜ் நிஷாத்.

சூரிய உலர்த்திகளை பயன்படுத்தி வாடும் பூக்களை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி மாதம் 4,0000 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவ்ராஜ் நிஷாத். 

பூக்கள் என்றாலே அனைவரும் விரும்புவர், ஆனால் இந்த பூக்களின் ஆயுள் ஓரிரு நாட்களில் முடிந்துவிடுகிறது. இதனால் இதையே நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு எல்லா நாட்களும் நல்ல வருமானம் கிடைப்பதில்லை. பண்டிகை நாட்களில் நல்ல லாபம் கிடைத்தாலும் ஆண்டு முழுவதும் பூக்கள் விலைபோவது இல்லை, பூக்களின் தேவை குறைவாக இருக்கும் நாட்களில் பூக்களை செடிகளிலேயே விட்டுவிடுகின்றனர், இல்லை என்றால் அவற்றை பறித்து குப்பைகளிலோ அல்லது ஆறுகளிலோ வீசி விடுவர். இதற்கு மாறக சூரிய உலர்த்திகளை பயன்படுத்தி வாடும் பூக்களை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி பூ விவசாயத்தில் லட்சத்தில் சம்பாதித்து வருகிறார் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவ்ராஜ் நிஷாத். 

நீண்ட நேரம் மருந்துவப் பிரதிநிதியாக இருத்து வந்த ஷிவ்ராஜ் நிஷாத்திற்கு (30வயது), தனது பணியில் விரக்த்தி ஏற்படவே உத்திரபிரதேச மாநிலம் ஷேக்பூரில் உள்ள தனது குடும்பத்தின் நிலத்திலேயே மலர் சாகுபடி செய்யத் திட்டமிட்டார், இருப்பினும் மலர் சாகுபடியில் ஆண்டுமுழுவதும் வருமானம் கிடைப்பது சிரமம் என்று உணர்ந்து சூரிய உலர்த்திகளை பயன்படுத்தி வாடும் பூக்களை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய திட்டமிட்டார். 

மருத்துவத்தில் தாவரங்களின் முக்கியத்துவம்

இத்தகைய புதுமையான முயற்சியின் காரணம் குறித்து நிஷாத் பேசுகையில், ''எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள்  சில நேரங்களில்  தங்கள் மலர்களை  விற்க முடியாமல், கங்கையில் கொட்டினர். "ஒரு கிலோ கூட வாங்க யாரும் இல்லை," மருத்துவ விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக பூக்களின் ஆயுட்காலம் மற்றும் சந்தை மதிப்பை அதிகரிப்பதற்கான வழிகளில் பணியாற்றத் தொடங்கினேன், மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் முன்பே எனக்கு  கொஞ்சம் தெரியும் எனவே வீணாகும் பூக்களின் ஆயுளை நீட்டித்து விற்பனை செய்ய திட்டமிட்டேன். ஆயுர்வேதம் மற்றும் மூலிகை மருத்துவத்தில் இத்தகைய பூக்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதை தெரிந்துகொண்டேன்.

மூலிகை தேநீர் 

ஊதா கலர் பட்டாணி பூக்கள் (blue pea flower) நீரிழிவு, நோய் எதிர்ப்பு, இளமை பராமரிப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்கள் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, இதனை அறிந்துக்கொண்டு அதன் நிறம் மற்றும் மருத்துவ குணங்கள் குறையாமல் அதனை விற்பனை செய்தேன் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது மேலும் மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, சாமோமில்  உள்ளிட்ட பூக்களை உலர்த்தி அதனை தேயிலையாக விற்பனை செய்கிறேன். 

தற்போது ப்ளூ வேதா (Blue veda) என்ற பெயரில் எனக்கு பிராண்ட் உள்ளது, எனது தொழிலை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளேன். மருத்துவம் மற்றும் மூலிகை செடிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் அதற்காக தனி கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் நிஷாத். 

பூக்களை உலர்த்தும் எண்ணம் புதிதல்ல என்றாலும், நிஷாத்தின் முறை ஆக்கப்பூர்வமானது. பூக்களின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், அவை பறிக்கப்பட்ட சில நாட்களில் அழுகத் தொடங்கும். அவற்றை உலர்த்துவதன் மூலம் அவற்றின் நிறம், வாசனை மற்றும் மருத்துவ நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மாற்றத்தை கொண்டு வந்த சூரிய உலர்த்தி (Solar Dryers)

சோலார் ட்ரையர்களின் பயன்பாடு நிஷாத்தின் வணிக முயற்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. ஆரம்பத்தில், அவர் திறந்த சூழலில் பூக்களை உலர்த்தினார், ஆனால் இந்த முறை தூசி, பறவைகள் மற்றும் வானிலை போன்ற சிக்கல்களை கொண்டிருந்தது. இது தயாரிப்பை அழிக்கக்கூடும் என்பதை உனர்ந்து பின் சூரிய உலர்த்திகள் மூலம் பூக்களை உலர்த்த தொடங்கினார் .

"சோலார்  ட்ரையர் தூசி  உள்ளே செல்ல அனுமதிக்காது. அதில் உலர்த்தும் தயாரிப்பு உணவு தரம் மற்றும் 100% தூய்மையானது" என்று நிஷாத் விளக்குகிறார். 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதன் மூலம் பூக்கள் அவற்றின் அசல் நிறத்தையும் வாசனையையும் தரத்தை இழக்காமல் வைத்திருப்பதை  உலர்த்திகள் உறுதிசெய்தன

ஒட்டுமொத்த வருமானத்தை மேம்படுத்துதல்

தற்போது நிஷாத்தின் பூ வியாபாரத்தில் மாதம் 500–1,000 கிலோ பூக்களை விற்பனை செய்து சுமார் ரூ. 1,00,000 முதல்  ரூ. 4,00,000 வரை லாபம் ஈட்டுகிறார். இந்த வணிகமானது நூற்றுக்கணக்கான உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கிறது மற்றும் சுமார் 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறார். அதில் பாதி பெண்களால் நடத்தப்படுகிறது.

சவால்கள் மற்றும் வெற்றிகள்

எந்த ஒரு தொழில் முனைவோரின் பயணத்தை போலவே, நிஷாந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். விவசாயத்தை ஆரம்பித்து, ஒரு வேலை செய்தபின், வியாபாரத்தை விற்று வளர்க்க முடியாமல் சிரமப்பட்டார். இருப்பினும், அவரது விடாமுயற்சி பலனளித்தது.

Read more

கிலோ ரூ.2.74 லட்சம் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த மியாசாகி மாம்பழங்களை வளர்க்கும் இந்தியாவின் முதல் விவசாயி

நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்

மகாராஷ்டிரா விவசாயி வாழ்வினை செழிப்பாக்கிய மஹிந்திரா டிராக்டர்!

 

English Summary: This man making a profit of up 40000 lakhs a month by converting wilting flowers into valuable products Published on: 29 August 2024, 12:29 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.