1. வெற்றிக் கதைகள்

K.V பாலு 25வருடம் தொடர்ச்சியாக வான்கோழி வளர்ப்பு

KJ Staff
KJ Staff

திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த K.V பாலு அவர்கள் கடந்த 24 வருடமாக இந்த வான்கோழி வளர்ப்பில் ஈடு பட்டு வருகிறார்.இந்த வருடம் 25வது வருடம் தொடர்ச்சி. வான்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார். விவசாய உபதொழிலாக இந்த வான்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

எவ்வகை பயனுள்ளது?

வான்கோழி இலைதலைகை விரும்பி சாப்பிடும். அருகம் புல், கோரைப்புல்  இவ்வகைய புல்களை தின்று ஒரு நாளைக்கு 70 ல் இருந்து 80  கிராம் வரை  எச்சம் மண்ணில் இடும்போது அது பசு  சாணம் போல மண்ணோடு மண் மக்கி தரமான உரமாக மாறுகிறது. இதில் நமக்கு கிடைக்கும் நன்மை என்றால் முதல் உரம், கலைகளை கட்டுப்படுத்துகிறது, மற்றும் கோழியில் நல்ல வளர்ப்பு ஏற்படுகிறது.

வளர்ப்பது எப்படி?

ஒரு கோழிக்கு 5  சதுர அடி அடைக்கிற  இடமும் 150 சதுர அடி மேய்ச்சலுக்காக இடமும் தேவை. மேய்ச்சலுக்கான இடம் இல்லை என்றல் சோளம், கம்பு, கோதுமை, மக்காச்சோளம், தினை மற்றும்   புழுங்கல் அருசி தவிடு, காயிகரி கழிவுகள் ஆகியவை கொடுக்கலாம். மேலும் இந்த புழுங்கல் அருசி தவிடில் புரதம், வைட்டமின் "பி" அதிகம் உள்ளது.இந்த வான்கோழி வளர்ப்பில் அதிகம் செலவு ஏதும் இல்லை. மற்ற கோழிகள் வளர்ப்பில்  உள்ள செலவு இதில் குறைவு.  ஒரு கோழி குஞ்சிலிருந்து வளர்த்து 5 , 6 மாதத்தில் விற்பனை செய்வதில் 300 ரூபாய் முன்னும் பின்னும் அளவில் வருமானம் கிடைக்கும். மேலும் விற்பனையின் போது கோழி வாங்குபவர்களுக்கு அவர்கள் இடத்திற்க்கேற்ப எப்படி  வளர்க்க வேண்டம் மற்றும் லசோக்க தடுப்பூசி போடும் பயிற்சியையும் அளிக்கிறார்கள்.

புழுக்களை கட்டுப்படுத்த:

மேலும் இந்த கோழிகளை தோட்டங்களில், தோப்புகளில், வளர்ப்பதால் இவ்விடங்களில் வரும் பூச்சி, புழுக்களை கட்டுப்படுத்த முடிகிறது. பொதுவாக  பாரம்பரிய, தரமான, தென்னந்தோப்புகளில்  இந்த காண்டாமிருக வண்டு வேரில் நுழைத்து ஒரே நாளில் மரத்தை அழித்துவிடுகிறது. இது தனது  முட்டையை தென்னை மட்டைகளில், அங்குள்ள குப்பைகளில் இடுகிறது. எவ்வகை கோழி என்றாலுமே அதன் வேலை குப்பையை  கிளறுவது மற்றும் சிறு சிறு பூச்சுகளை தின்பது. இப்படி கோழிகளை தோப்புகளில்  மேய்ப்பதால்  இந்த வெள்ளை பூச்சிகளையும், வளர்ந்துள்ள காண்டாமிருக வண்டுகளை அளிப்பதில் உதவுகிறது. 

பாதுகாப்பு

வான்கோழி மனிதர்களுடன் நன்கு பழகுபவை. மனிதர்களை அடையாளம்  காண்பதில்  நல்ல திறன் கொண்டது. அந்நிய மனிதர்கள் யாரவது வந்தால் சத்தம் போட்டு காட்டிக்கொடுத்து விடும். மற்றும் மற்ற விலங்குகள் அதன் சுற்றுப்புறத்தில் இருந்தால் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும், மேலும்  பாம்பை சத்தம் போட்டே விரட்டி விடும். பாதுகாப்பிற்கு நல்ல உதவிகரமாக இருக்கிறது.

English Summary: Trichy K.V Balu 25years of Turkey Farmimg Published on: 30 April 2019, 12:43 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.