1. வெற்றிக் கதைகள்

வேளாண்மையில் பெண்கள் ஆதவனாயி ஒளிருகின்றன

KJ Staff
KJ Staff

அழகு, புன்னகை, அடக்கம், பொறுமை, மேன்மை, தன்மை, இரக்கம், அலங்காரம்  இவை அனைத்திருக்கு பெண் ஆதாரமாகிறாள். அழுகு மட்டுமன்றி அருவுடையவளாகவும் பெண் இருக்கிறாள். பெண்களை வீட்டில் அடிமைப்படுத்தி ஆணுக்கு வேலைபார்ப்பவளாக ,பிள்ளை பெற்று தருபவளாக இருந்த நிலை மாறி ஆணுக்கு சமமாக இன்றைக்கு அணைத்து துறையிலும் நிலைத்து நிற்கிறாள்.

குடும்ப விளக்காய்:

ஆண்களை எத்தனை புகழ்ந்தாலும் குடும்ப குத்துவிளக்கு என்று பெண்ணையே போற்றுகிறோம். தாயாய், தாரமாயி, மகளாய், தமக்கையாயி, இத்தனை மாற்றங்களை வாழ்வின் ஓட்டத்தில் அவளின் பாத்திரம் மாறினாலும் அவள் உள்ளம் மாறாது. தன்னை சார்ந்தவர்களை காத்து நல்வழியில் கொண்டு செல்லும் சிறந்த பெண்ணாய் விளங்குறாள். ஒரு வீட்டின் பண்பு அந்த வீட்டின் பெண்ணைசார்ந்தே கருதப்படுகிறது.  பின் தூங்கி முன் எழும் கடிகாரமாயி இருக்கிறாள். இல்லறத்தின் இருள் அகற்றும் ஜோதியாயி இருக்கிறாள். பெண்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தேவதைகள்.

பணித்துறையில் ஆதவனாக ஒளிரும்:

வீடு வேலை மட்டுமன்றி ஆணுக்கு சமமாம் எங்களாலும் அணைத்து துறையிலும் வேலை பார்க்க முடியும் என்று உலகத்திற்கு நிரூபித்து காட்டி இருக்கிறாரகள் பெண்கள். இன்று எல்லா துறையிலும் பெண்கள் தங்கள் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கின்றன. தங்களால் எந்த துறையில் சாதிக்க முடியும் என்ற முடிவை மேற்கொண்டு சொந்த முயற்சியில் சாதித்து கொண்டிருக்கின்றன. வீடு பெருக்குவதில் இருந்து விண்ணுக்கு செல்லும் வரை தங்கள் தன்னம்பிக்கையும், சாதனையையும் வெளிக்காட்டியுள்ளன.

உளவு முதல் உறியடி வரை:

சேவகளுக்கே அலாரம் வைக்கும் வகையில் பெண் அதற்கு முன்னே விழித்து கொள்கிறாள்.  விதை விதைத்தல்நாற்று நடுதல், கலை எடுத்தல், நீர் பாய்ச்சல், அறுவடை செய்தல், போன்ற அத்தனை  பணிகளிலும்  பெண்ணின் உழைப்பு உள்ளது. மற்றும் வீற்றில் வளர்க்கும் கால்நடைகளை பராமரிப்பது, தீவனம் போடுவது, பால் கறப்பது, அதனை மேய்ப்பதுஅதில் இருந்து கிடைத்த பாலை  விற்பது போன்ற மற்ற பணிகளையும் செய்கிறாள். கட்டடப்பணி முதல்  கணிணிப்பொறி வரை தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு மனதில் தைரியத்துடன் பணிபுரிக்கிறாள்.

இதில் முக்கியமாக கிராமத்து பெண்கள் அனுபவ ஆசிரியராக திகழ்கின்றன. நம் கிராமத்து பெண்கள் வாசலில் கோலம் போடுவதில் மாட்டு சிறந்தவர்கள் இல்லை விதை விதைத்து அறுவடை செய்வதிலும் சிறந்து விளங்குகின்றன. சோறிடுபவளை அன்னலட்சுமி என்கின்றோம் அதைப்போல சோறு விளைவதற்கு முக்கிய காரணமா இருக்கும் அவளை தெய்வத்துடன் தான் ஒப்பிட வேண்டும். விவசாயம் இன்றி இவ்வுலகம் இல்லை. பெண்கள் இன்றி இங்கு விவசாயம் இல்லை. நேரம் பாராது தன் உறக்கத்தை மறந்து, ஆசை பார்க்காது, நேரத்திற்கு உண்ணாமல், தன் மக்கள் உண்டார்களா என்று தன் ஆசா பாசங்களை மறந்து வாழும் உத்தமி மட்டுமன்றி தன் குடும்பத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்ய்பவள் பெண். 

சிந்தனையோடு உழைப்போடு உலகில் உலாவரும் உத்தமப்பெண்ணே ... நீதான் உலகம்! நீதான் நாட்டின் உத்திரம்.விவசாயத்தின் தேசியகீதம் நீ... எங்கள் நாட்டின் வளம் நீ... எங்கள் வீட்டின் பலமும் நீயே.. நீயே.

English Summary: women role in agriculture Published on: 17 April 2019, 04:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.