தமிழக அரசின் சார்பில் வரும் 12.03.2020 (நாளை) காலை 9.30 மணி அளவில் இலவச ஒரு நாள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தபட உள்ளது. இந்நிகழ்ச்சியினை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட, சுய தொழில் தொடங்க விரும்பும் ஆண்/ பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
சிறப்பு முகாமில் முதற் கட்டமாக, சுய தொழில் தொடங்குவதினால் உண்டாகும் நன்மைகள், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், லாபம் தரும் தொழிலை தெரிவுசெய்வது எப்படி?, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது, சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான நிதியுதவிகளை அரசு மற்றும் பிற நிறுவனங்களில் பெறுவது, அரசு சார்பில் வழங்கப்படும் பிற உதவிகள் குறித்து இம்முகாமில் விளக்கப் படுகிறது.
விழிப்புணர்வு முகாமின் சிறப்பம்சம்:
- பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில், சுய தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்களை அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்கள்.
- தேர்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, தொடங்க விரும்பும் தொழில் தொடர்பான, திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, அவர்களது திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
- தொழில் முனைவோர்களுக்கு, அவர்களின் திட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு தேவையான நிதி உதவிகள், பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
- இதில் இணையும் பயிற்சியாளர், விரும்பும் பட்சத்தில் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க அமைப்பு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தொழில் மையங்களுடன் இணைந்து செயல்படுவாதல், அனைத்து மாவட்டத்தினரும் பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
ஈக்காட்டுத்தாங்கல்
சென்னை - 32
தொலைபேசி எண்: 044-22252081/82/83