கால்நடை வளர்ப்போர், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூ1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) உதவுகிறது.
இன்னும் பல பலன்களை அளிக்கும் இந்த கால்நடை உழவர் கடன் அட்டையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து பார்ப்போம்.
விவசாயத்தின் ஆதரவுத் தொழில்களுள் ஒன்று கால்நடை வளர்ப்பு. இந்த கால்நடை வளர்ப்பு என்பது வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கால்நடை துறையை மேம்படுத்தவும் கால்நடை துறையில் ஈடுபட விரும்புவர்களுக்கு உதவும் வகையிலும் கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.
திட்டத்தின் பயன்கள் (Benefits of Scheme)
-
கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூ1.60 லட்சம் வரையிலான தொகையைக் கடனாக பெற முடியும்.
-
இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
-
கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானியமாகச் செலுத்தும். . இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாகக் குறைகிறது.
-
கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த கடன் அட்டையைப் பெற கால்நடை பராமரிப்புத் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடன் அட்டை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து நில ஆவணம் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கால்நடை உரிமையாளர்கள் இரண்டு எருமைமாடுகள் வாங்க கடன் வழங்கப்படும். அதனுடன் கடன் அட்டையும் சேர்த்து வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கவும் கடன் உதவி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!
கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments