தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதியகுளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும் படிக்க: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சம் மற்றும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும். மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சம் பொதுபிரிவினருக்கு 40% மானியமாக 2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.3.60 லட்சம் வழங்கப்படும். மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டர் என மொத்தம் 8 ஹெக்டர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவிக்கிறார்.
வங்கி விடுமுறை பிப்ரவரி 2023: வங்கி வேலையை இந்நாட்களில் திட்டமிடாதீர்
உவர் நீர் இறால் வளர்ப்பு:
உவர்நீர் நிலைகளுக்கு அருகாமையில் வண்டல்மண் மற்றும் களிமண் கலந்த இடங்கள் உவர் இறால் வளர்ப்பு குளங்கள் அமைய ஏற்றவையாகும். குளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குளத்தின் மொத்த ஆழமானது வர்ப்பையும் சேர்த்து 6 அடி இருக்குமாறு அமைத்து அதில் 3.5 முதல் 4 அடி அளவு நீரை தேக்கி வைத்தல் தேவையானது. அமைக்கப்படும் ஒவ்வொரு குளமும் 0.5 முதல் 1.5 எக்டர் பரப்பளவில் செவ்வக வடிவில் இருத்தல் அவசியம். குளக்கரையின் சரிவானது 1:1:5 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.
குளத்தை தயார் செய்தல்
குளங்களை நன்கு காயவிட்டு அக்குளங்களை உழவேண்டும். குளத்தில் 25 கிலோ சுண்ணாம்பிட்டு அவற்றின் கார அமிலத்தன்மையானது 7.5 முதல் 8.5 வரை உயர்த்த வேண்டும். இயற்கை உரங்களான மக்கியசாணம் (1000 கிலோ எக்டருக்கு) மற்றும் கோழி எரு (250 கிலோ எக்டருக்கு) இட்டு குளத்தில் நீர் மட்டம் 30 செ.மீ அளவில் வைக்க வேண்டும். செயற்கை உரங்களான யூரியா மற்றும் சூப்ர் பாஸ்பேட் 4:1 என்ற விகிதத்தில் 25 முதல் 50 கிலோ வரை எக்டருக்கு வழங்க வேண்டும். உரமிடுதல் மூலம் இயற்கை உயிர் உணவுகளின் உற்பத்தியை உயர்த்தலாம், சில நாட்கள் சென்ற பின்னர் நீரின் நிறம் பசுமையாக மாறியதும் நீர்மட்டத்தை 1 மீட்டருக்கு உயர்த்தி பின்னர் தேவைக்கேற்ற உரமிட்டு அவற்றை அறுவடை செய்யலாம்.
மேலும் படிக்க:
Share your comments