நோய் பரவ வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் தங்கள் வளர்ப்புக் கால்நடைகள் இறந்தால், அவற்றின் உடலை கவனமாக கையாள வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறையினர் (Department of Animal Husbandry) அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக வறட்சி மற்றும் மழைக்காலங்களில் கால்நடைகள் இறப்பு (Livestock) சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு வளர்ப்பு கால்நடைகள் நோய் தாக்கி இறக்க நேர்ந்தால், அவற்றின் உடல்களை ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீசுவதை கால்நடை வளர்ப்போர் வழக்காமாகக் கொண்டுள்ளனர். இதனால், தண்ணீரில் பல்வேறு பகுதிகளுக்கு நோயை பரப்பி விடும் ஆபத்து உள்ளது.
பொள்ளாச்சியில் இவ்வகை சம்பவங்களின் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன. எனவே கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பின்வரும் வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர்.
அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள்
-
கால்நடைகள் திடீரென இறந்தால், கட்டாயம் தங்கள் பகுதி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
-
இறந்த உடலை ஆய்வுக்கு உட்படுத்தி, கோமாரி, அடைப்பான் போன்ற பரவும் நோய்களால் இறப்பு நேர்ந்ததா? என்பதைக் கண்டறிய வேண்டும்.
-
இல்லாவிட்டால், அப்பகுதியில் உள்ள மற்ற கால்நடைகளுக்கும் நோய் பரவுவதுடன் இறப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
-
கால்நடை மருத்துவர் ஆய்வு செய்யும் வரை இறந்த கால்நடையை எதுவும் செய்ய கூடாது.
-
நோய்களால் கால்நடை உயிரிழந்திருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி உடலை அடக்கம் செய்ய வேண்டும்.
-
இறந்த கால்நடைகளைத் திறந்தவெளியிலோ, நீர்நிலைகளிலோ வீசக்கூடாது.
மேற்கண்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால் நோய் பரவலைத் தடுப்பதுடன், கால்நடைகளையும் தற்காத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments