1. கால்நடை

இந்த வகை பயிர்ச்சிலந்திகள் எல்லாம் ஆபத்து- விவசாயிகளே கவனம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
plant spiders

சமீபத்தில் பயிர்களைத் தாக்கும் சிலந்திகளைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இதில் மைக்ரான் அளவில் இருந்துக்கொண்டு பயிர்களை நாசம் செய்யும் சிலந்திகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அறிவியல் ரீதியாக சிலந்திகள் அராக்னிடா வகுப்பின் கீழ், அக்காரினா என்னும் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பயிர்களைத் தாக்கும் சிலந்தியானது கால்நடைகள், நாய் மற்றும் மனிதனைத் தாக்கும் உண்ணி வகையைச் சார்ந்தவை. பெரும்பாலான பயிர்ச்சிலந்திகள் டெட்ரானைக்கிடே, டெனுபால்பிடே, டார்சோநெமிடே மற்றும் ஈரியோபைடே ஆகிய குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு-

பொதுவாக டெட்ரானைக்கிட் பயிர்ச் சிலந்திகள் மிகவும் நுண்ணியவைகளாகவும், 100-250 மைக்ரான் அளவிலும் இருக்கும். இவற்றின் உடலில் தலை, மார்பு, வயிறு ஆகிய பாகங்கள் ஒன்றாக இணைந்து காணப்படும். இவை நான்கு ஜோடி கால்களுடனும், வட்ட வடிவில் அல்லது நீள்வட்ட வடியிலும் இருக்கும். அவற்றிற்குச் செல்களைக் குத்தி சாறு உறிஞ்சும் வகை வாய்ப்பாகங்கள் உள்ளன. நிம்ப் என்று அழைக்கப்படும் இளநிலை சிலந்தி, வளர்ந்த சிலந்தியைப் போன்றே தோற்றத்தில் இருக்கும். ஆண் சிலந்திகள், பெவர் சிலந்திகளைக் காட்டிலும் உருவத்தில் சிறியவைகளாக இருக்கும்.

ஈரியோபைட் பயிர்ச் சிலந்திகள் மற்ற குடும்பங்களைச் சார்ந்த சிலந்திகளிலிருந்து மாறுபட்டு, புழு போல் நீண்ட உடலைக் கொண்டிருக்கும். தலையும் மார்பும் ஒன்றாக இணைந்தும், வயிற்றுப்பாகம் தனியாக நீண்டும், நுனிப்பகுதி மெலிதாகவும் இருக்கும். இவற்றிற்கு இரண்டு ஜோடி கால்கள் மட்டுமே இருக்கும். குத்தி உறிஞ்சும் வகை வாய்ப்பாகங்களைக் கொண்டது.

இதன் இனப்பெருக்கமானது இனச்சேர்க்கை மூலமாகவும் மற்றும் குஞ்சு உருவாகுதல் கருவுறா (பார்தினோஜெனிசிஸ்) முறையிலும் நடைபெறுகிறது. முட்டைகளைத் தனித்தனியாகவும் கூட்டமாகவும் இடுகின்றன. முட்டையிலிருந்து வரும் டெட்ரானைக்கிடே இளம் குஞ்சுகள் எட்டு கால்களுடனும், ஈரியோபைடே குடும்பத்தைச் சார்ந்த சிலந்திகள் நான்கு கால்களுடனும் காணப்படும். பிறந்த ஐந்து முதல் ஏழு நாட்களில் இதன் வாழ்க்கைச் சரிதம் நிறைவடையும். முட்டை, இளம் சிலந்தி மற்றும் வளர்ந்த சிலந்தி ஆகிய மூன்று பருவ நிலைகள் உள்ளன.

இச்சிலந்தியின் முட்டையானது வெளிர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த சிலந்தியானது இலைகளின் அடிப்பரப்பில் தங்கி சாற்றை உறிஞ்சுகின்றன. தாக்குதல் அதிகமாகும்போது இலைகளின் இருபரப்பிலும் இவை தென்படும். மெல்லிய நூலாம் படை செடி முழுவதும் படர்ந்து காணப்படும். சிலந்திகள் காற்றின் மூலம் எளிதில் பரவுகின்றன.

டார்சோனிமிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திகள் மிளகாய்ச்செடியை அதிக அளவில் தாக்குகின்றன. இவை இலையின் அடிப்பரப்பில் தங்கி சாற்றை உறிஞ்சி சேதத்தை விளைவிக்கின்றன. தாக்குதலுக்குண்டான இலைகள் கருங்கி கீழ் நோக்கி வளைந்து விடுகின்றன. செடிகளின் பூக்கும் திறன் குறைந்துவிடும். இவ்வகை அறிகுறியை மிளகாய் முரனை நோய் என அழைப்பர். இவ்வகை சிலந்தியை முரனைச் சிலந்தி என அழைப்பர்.

இதையும் காண்க:

மழையால் அடித்துச் செல்லப்படும் மண்ணிலுள்ள சத்து- என்ன பண்ணலாம்?

மக்காச்சோள பயிரில் படைப்புழு- இனக்கவர்ச்சி பொறி டிப்ஸ் உதவுமா?

English Summary: Awareness for farmers about the most dangerous plant spiders Published on: 20 November 2023, 05:01 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.