ஒரு வெற்றிகரமான இனவிருத்திக்குக் காளைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவ்வாறு பராமரிக்கும்போது, பின்வரும் குறிப்பிட்ட விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதும் கட்டாயம்.
பால் உற்பத்தி (Milk production)
-
காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும் போது பால் உற்பத்தி மற்றும் மூதாதையரின் உற்பத்தித் திறன் உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
-
ஒரு வருட வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றுகளில் இருந்துப், பிரித்து நல்ல புரோட்டின் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளித்துப் பராமரிக்க வேண்டும்.
சிறந்த விந்துக்கள் உற்பத்தி (Excellent sperm production)
இனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால் அது சிறந்த விந்துக்களை உற்பத்தி செய்ய வாய்ப்பு குறைவு.
பெரிய தலை (Big Head)
பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்கவேண்டும்.
பருவம் அடைதல்
-
மாடுகளில் காளைகள் 16முதல் 18வயதில் பருவம் அடையும்.
-
எருமை மாடுகள் 4 முதல் 6 மாதங்கள் காலதாமதமாகவே பருவம் எய்துகின்றன.
உடல் எடை (Body Weight)
காளையின் எடை 300 கிலோவிற்கு இருக்க வேண்டும்.
விந்து உற்பத்தி (Sperm production)
-
30மாதத்தில் விந்து உற்பத்தி நன்கு வெளிப்படும்.
-
அதிகபட்சம் 3வருடங்கள் விந்து சேகரிக்கலாம்.
-
எருமைகளுக்கு முப்பது வருடங்கள் ஆகும். நாளொன்றுக்கு இருமுறை கலப்பு செய்யலாம்.
-
விந்து சேகரிப்பு செய்வது என முடிவு செய்தால், வாரம் இருமுறை என ஆண்டுக்கு 100முறை தரமான வித்து சேகரிக்கலாம்.
நோய்த் தடுப்பு (Immunization)
காளைகளுக்கு நோய்கள் ஏற்படாவண்ணம் பராமரித்தல் அவசியம்.
மேலும் படிக்க...
அதிக லாபம் தரும் இறைச்சி கோழி வளர்ப்பு! இப்போதே எளிதில் தொடங்கலாம்!
அடிச்சுத்தாக்கும் வெயில் - அதிரடியாகக் குறைந்தது பால் உற்பத்தி!
வாழ்நாளில் 4 லட்சம் லிட்டர் வரைப் பால் கொடுக்கும் மாடு எது தெரியுமா?
Share your comments