தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்களை, மாலை நேரத்திலும் திறந்து சிகிச்சை (Treatment) அளிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிகிச்சை நேரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், ஐந்து கால்நடை மருத்துவமனைகள், 89 கால்நடை மருந்தகம், 26 கால்நடை கிளை நிலையங்கள், ஒரு நடமாடும் வாகனம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு காலை 8:00 மணி - மதியம் 12:00 மணி; மாலை 3:00 மணி - மாலை 5:00 மணி வரை கால்நடைகள் (Livestock), செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சில மாதங்களாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மருந்தகம், கிளை நிலையங்களில் காலை நேரத்தில் மட்டுமே திறந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் திறப்பதில்லை. இதனால், விவசாயிகள், கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மாலை நேரத்தில் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் திட்டப் பணிகளுக்கு கிராமங்களுக்கு செல்லும் போது, உதவியாளர்கள் மருந்தகம், கிளை நிலையம் திறந்து முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால், உதவியாளர்கள் மதியத்திற்கு வருவதில்லை. இது குறித்து மாவட்ட கால்நடை துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாலை நேரத்திலும், கண்டிப்பாக மருந்தகம், கிளை நிலையங்கள் திறந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில். ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மேலும் படிக்க
சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
Share your comments