1. செய்திகள்

சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
MK Stalin
Credit : Dinamalar

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, வேளாண் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) அறிவுறுத்தி உள்ளார்.

சாகுபடி பரப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், கூடுதலாக 28.78 லட்சம் ஏக்கரில் பயிரிடச் செய்து, தற்போது 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை (Cultivstion Area), 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 24.50 லட்சம் ஏக்கரில் இருந்து, 49 லட்சம் ஏக்கராக உயர்த்த வேண்டும்.

கிராம வாரியாக நிலங்களை கணக்கெடுத்து, சாகுபடிக்கு தேவையான அனைத்து பாசன வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள் (Seed), ரசாயன உரங்கள் போன்ற வேளாண் இடுபொருட்களை இருப்பு வைத்து விநியோகம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய உழவர் சந்தைகள்

உழவர் சந்தைகள் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாத உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க

விவசாய சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்

சொட்டுநீரில் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்து லாபம் பெறும் மதுரை விவசாயி!

English Summary: Cultivation area should be increased to 75 percent: Chief Stalin's instruction! Published on: 22 July 2021, 06:00 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.