1. கால்நடை

இந்த நேரத்தில் கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது: ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Chickens should not be fed at this time

ஆரம்பகால கோடை காலத்தை சமாளிக்கவும், கோழிகளை பாதுகாக்கவும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பில்லை (No Rain)

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

தீவனம் அளிக்கக்கூடாது (should not be fed)

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். கோடை காலம் தொடங்க உள்ளதால் பகல் மற்றும் இரவு நேர வெப்ப நிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. அதனால் முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு வெப்ப அயற்ச்சியால் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் வெப்ப அதிர்ச்சியால் கோழிகள் இறக்கலாம். ஆரம்பகால கோடை காலத்தை சமாளிக்கவும், கோழிகளை பாதுகாக்கவும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது.

மேலும் படிக்க

கன்றுக்காக 3 கி.மீ. வரை காரை தொடர்ந்த தாய்ப்பசு!

தமிழகத்தில் முதல் முறையாக புலிக்குட்டிக்கு வனத்தில் பயிற்சி!

English Summary: Chickens should not be fed at this time: Research Station Instruction! Published on: 09 February 2022, 02:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.