சில புழுக்கள் காயத்தை சுத்தம் செய்யவோ அல்லது வலியைப் போக்கவோ சிம்பன்ஸிக்களுக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளர். பூச்சிகளையேக் காயங்களுக்கு மருந்தாக்கும் சிம்பன்சியின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிம்பன்சி தங்கள் காயங்களில் பூச்சிகளை களிம்பு போல் தடவுகிறது. இது தொடர்பாக வைரலாகும் வீடியோ பல ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமாக உள்ளது. தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், ஒரு சிம்பன்சி தனது மகனின் காலில் பூச்சிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். வைரல் வீடியோவில் காணப்பட்ட இந்த சிம்பன்சியை ஓஜோகா சிம்பன்சி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயது வந்த சிம்பன்சி சுசி முதலில் ஒரு பறக்கும் பூச்சியைப் பிடித்து தனது குழந்தையின் காயத்தை ஆற்றுவதற்காக அதை வாயில் வைத்தது. அதன் பிறகு, சிறிது நேரம் அதை மென்று சாப்பிட்ட பிறகு, தாய் சிம்பன்சி அந்த பூச்சியை தனது குழந்தையின் காயத்தின் மீது தடவியது. தாய் மருந்தாக பயன்படுத்திய பூச்சி எந்த வகை என்பதோ, அதுதொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
விலங்குகள் பொதுவாக இயற்கையான முறையில் சிகிச்சை செய்துக் கொள்கின்றன. சில விலங்குகளுக்கு காயங்கள் ஏற்பட்டால், அவை தங்கள் காயங்களை நாக்கால் நக்குவதைக் காணலாம்.
மேலும் படிக்க...
Share your comments