மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது கோமாரிநோய். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகும் மாடுகளின் மிக அதிகம். அதிலும் கோமாரி வாய்ப்புண் என்பது மிகவும் முக்கியமானது.
நோய்க்கான காரணம் (The cause of the disease)
இந்நோய் மாடுகளைத் தாக்கும் கொடிய நச்சுயிரி நோயாகும்.
அறிகுறிகள் (Symptoms)
-
இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாய், கால் மற்றும் மடியில் கொப்புளங்கள் தோன்றும்.
-
பால் கறக்கும் கறவை மாடுகளில் திடீரென பால் உற்பத்தி குறைவு, தாயிடம் பால் குடிக்கும்.
-
கன்றுகள் இறந்து விடுதல், சினை மாடுகளில் கன்று வீசுதல், மற்றும் சினைப் பிடிக்காதிருத்தல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.
-
அதிக காய்ச்சல் (104-106 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் பசியின்மை
-
நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயிலிருந்து உமிழ் நீர் நூல் போல் தொங்கிக்கொண்டு இருத்தல்.
-
வலியின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாடுகள் காலை உதறிக் கொண்டு இருத்தல், பிறகு நொண்டி நடத்தல்.
-
பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் கொப்புளங்கள், புண்கள் காணப்படுதல்.
-
வலியின் காரணமாக மாடுகள் சப்புக் கொட்டிக்கொண்டு இருத்தல்.
-
பாதிக்கப்பட்ட மாடுகளின் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்.
-
இந்த நோயில் இருந்து மாடுகளைப் பாதுகாக்கப் பின்வரும் இயற்கை மருந்தைத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
இயற்கை மருந்து (Natural medicine)
தேவையான பொருட்கள் (Ingredients)
சீரகம் - 10 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
மஞ்சள் பொடி - 10 கிராம்
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1
வெல்லம் - 120 கிராம்
தயாரிப்பு முறை (Preparation)
-
சீரகம், வெந்தயம் மற்றும் மிளகைத் தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
-
பின்னர் அனைத்துப் பொருட்களையும் நன்கு அரைக்கவும்.
-
ஒரு முழு தேங்காயைத் துருவி, அரைத்தக் கலவையுடன் சேர்த்துக் கையால் கலக்கவும்.
-
ஒவ்வொரு முறையும் புதிதாய் தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது.
பயன்படுத்தும் முறை (Method of use)
-
வாய், நாக்கு மற்றும் கடைவாயின் உள்புறம் தடவவும்.
-
தயாரித்த கலவையை ஒரு நாளுக்கு மூன்று முறை 3-5 நாட்களுக்குக் கொடுக்கவும்.
நோய் பரவாமல் தடுக்க (Prevent the spread of disease)
-
நோய் தாக்குதலை கண்டறிந்தப் பின்பு நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து தனியாக பிரித்துப் பராமரிக்கவேண்டும்.
-
மேலும் மாடுகளின் நடமாட்டத்தையும் குறைத்துவிட வேண்டும்.
-
பொதுவான மேய்ச்சல் நிலங்களில் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மேய அனுமதிக்கக்கூடாது.
-
பாதிக்கப்பட்ட மாடுகள், குளங்கள், ஓடைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் அருந்த அனுமதிக்கக்கூடாது.
-
நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளுடன் மேயவோ அல்லது அலையவோ அனுமதிக்கக்கூடாது.
-
நோய் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிக்கும் பணியாளர்கள், நோயற்ற மாடுகளைப் பராமரிக்கவோ, அல்லது நோயற்ற மாடுகள் பராமரிக்கப்படும் பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு செய்யமுடியவில்லை எனில் இப்பணியாளர்கள் நோயற்ற பண்ணைகளுக்குள் நுழையும் போது குளித்துவிட்டு (சோப்பைப் பயன்படுத்தி) செல்லவேண்டும்.
-
நோய் தாக்குதலின் போது முதலில் நோயற்ற மாடுகளை பராமரித்துவிட்டு பிறகு, நோய் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கான பராமரிப்பு பணிகளை செய்யவேண்டும்.
-
நோயுற்ற மாடுகளைப் பராமரித்த பிறகு பணியாட்கள் தங்களை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
-
பாதிக்கப்பட்ட மாடுகளில் கன்றுகள் பாலூட்ட அனுமதிக்கக்கூடாது.
-
பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்குக் கொடுக்கக்கூடாது.
-
சுண்ணாம்புத்தூளை பண்ணையில் தெளிக்கவேண்டும்.
-
பண்ணையின் நுழைவாயிலில், பண்ணைக்குள் நுழைபவர்களின் கால்கள், மற்றும் பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் கிருமி நாசினியில் நனைத்து உள்ளே வருமாறு கிருமி நாசினிக் கரைசல் நிரம்பிய ஒரு பள்ளம் போன்ற பகுதியினை அமைக்கவேண்டும்.
மேலும் படிக்க...
வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!
பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?
பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!
Share your comments