
Credit : Daily Thandhi
ஒரு பால் பண்ணையை (Dairy farm) வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நீங்கள் செய்கின்ற சோதனை மிக அவசியமானது. மனிதன் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி புதுவிதமான நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் மாடு, ஆடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம்.
சோதனை அவசியம்
உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்ப கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு (Livestock) எப்போது வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. அந்த மாதிரி சமயத்தில் கால்நடை மருத்துவரை (Veterinary doctor) அணுக வேண்டியுள்ளது. சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி (Milk Production) பாதிக்கப்படும் . நோய் அதிகமானால் கால்நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை சோதனை செய்வது அவசியமாகிறது. கால்நடைகளை சோதிக்கும் ஐந்து விதமான சோதனைகள் பற்றி காண்போம்.
சாணத்தில் ஒட்டுண்ணிகள் சோதனை
நீங்கள் கட்டாயமாக செய்யவேண்டிய சோதனைகளில் ஒன்று ஒட்டுண்ணி சோதனை. மூன்று முதல் நான்கு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக செய்ய வேண்டிய சோதனைகளை ஓன்று. உடலுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் (Parasites) எப்போதும் பால் விலங்குகளின் ஊட்டச்சத்துடன் போட்டியிடுகின்றன. முக்கியமாக ரவுண்ட் வார்ம்கள் மற்றும் டேப் புழுக்கள் இருக்கும் தவிர, வேறு சில வகையான எண்டோ ஒட்டுண்ணிகளும் கால்நடைகளின் உடலுக்குள் காணப்படுகின்றன.
பால் காம்புகளுக்கான சோதனை
மாடுகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. பால் சுரப்பு திடீரென்று குறையும் வரை இந்நோயின் தாக்கம் உங்களிற்கு தெரியாது . அறிகுறிகள் என்று பார்த்தல் காம்பில் வேர்க்கும் , காய்ச்சல் இருக்கும். நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடும் சோமாடிக் செல்கள் (Somatic cells) பாலில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 200,000 செல்கள்/மில்லி இருந்தால் நோய் தாக்கம் உள்ளது என்று அர்த்தம். பண்ணையில் இதனை சோதனை செய்ய அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் (Veterinary medical shop) இந்த சோதனையைச் செய்ய ரெடிமேட் கிட் கிடைக்கின்றன
நீர் பரிசோதனை
ஒரு மாடு ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு குறைந்தது 5 லிட்டர் நீர் பருக வேண்டும். நீரில் PH 5.1-க்கு குறையாமலும், 9-க்கு அதிகமாகமலும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் பால் உற்பத்தி குறையும், பாலின் சுவையும் குறையும்.
தீவனத்திற்கான சோதனைகள்
நீங்கள் கொடுக்கும் உணவு தரமானதாக இருப்பது நல்லதாக இருக்க வேண்டும். உங்கள் மாட்டின் உடல் நலத்தையும் மற்றும் பால் வளத்தையும் பெருக்கும். மேலும் இதுதான் உங்கள் பால் பண்ணையை லாபமா (Profit) அல்லது நட்டமா (Loss) என்பதை தீமானிக்கும். நீங்கள் வெளியிலிருந்து தீவனங்கள் வாங்கினால் அதை ஆய்வகத்தில் கொடுத்து தரத்தை சோதனை செய்வது நல்லது .
Tests for brucellosis
மாடுகளுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும் ஒன்று. கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பால் மந்தைகளில் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால் ப்ரூசெல்லோசிஸ் (brucellosis) நோயை பரிசோதிப்பது அவசியம். ஒரு பண்ணையிலிருந்து புதிதாக மாடு வாங்கினால் அந்த மாட்டிற்கு இந்த நோய் இருக்கிறத என்று சோதனை செய்ய வேண்டும். நாய்கள், ஈக்கள், காட்டுப் பறவைகள் போன்றவற்றிலிருந்து இந்த நோய் பரவுகிறதா என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments