உசிலம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை மைய வளாகத்தில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் (Sustainable Agriculture Operational Plan) கீழ் 50 சதவீதம் முன்னேற்பு மானியத்துடன் (Subsidy) விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மானியம்:
தற்போது மக்களிடையே நாட்டுக்கோழி, ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசும் பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மானிய (Subsidy) விலையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மானிய விலையில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வழங்கியுள்ளது.
கால்நடைகளை வழங்குதல்:
கால்நடை மருத்துவர்களின் (Veterinarians) பரிந்துரைப்படி மாடுகளை வாடிப்பட்டி சந்தையிலும், ஆடு, கோழிகளை உசிலம்பட்டி சந்தையிலும் விவசாயிகள் வாங்கினர். உதவி இயக்குநர்களான வேளாண் துறை ராமசாமி (Ramasamy), தோட்டக்கலைத்துறை தாமரைச்செல்வி (Thamaraiselvi), கால்நடை மருத்துவர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் 98 பயனாளிகளுக்கு கால்நடைகளை (Livestock) வழங்கினர். மானிய விலையில் கால்நடைகளை வழங்கும் அரசின் திட்டம், பல இளைஞர்களை தொழில் செய்ய ஈர்க்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!
ருசியான தரமான நாட்டுக்கோழி வளர்க்க வேண்டுமா? சில தகவல்கள் இங்கே!
Share your comments