Krishi Jagran Tamil
Menu Close Menu

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

Saturday, 02 January 2021 02:46 PM , by: KJ Staff
Ant

Credit : Dinamalar

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றை (Covid-19) குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி (Red Ant Chutney) உதவுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கம்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவப்பு எறும்பு சட்னி:

ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் (Indigenous people) சிவப்பு எறும்புகளை பிடித்து, அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி சட்னி ஒன்றை தயார் செய்கின்றனர். இந்த சட்னியை உண்ணுவதன் மூலம் காய்ச்சல், இருமல், பொதுவான சளி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆய்வில் தகவல்:

ஒடிசாவில் நயாதர் படிஹல் (Nayadar Padihal) என்ற பொறியாளர், பல்வேறு ஆய்வுகளை செய்து, 'செவ்வெறும்பு சட்னி சாப்பிட்டால், கொரோனா பாதிப்பு குறையும்' என, கடந்த ஆண்டு அறிவித்தார். செவ்வெறும்புகளுடன், மிளகாய் சேர்த்து அரைத்த சட்னியை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால், அவர்கள் குணமடைய வாய்ப்பு உள்ளதாக, அவர் கூறினார். இந்த சட்னியில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பார்மிக் அமிலம் (Formic acid), புரதம், கால்சியம், விட்டமின் பி 12, இரும்பு, துத்தநாகம் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, இந்தியா முழுதும் கொரோனா பாதித்தாலும், பழங்குடியினரை மட்டும் அதிகம் தாக்கவில்லை' என, நயாதர் படிஹர், தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பொதுநல மனு:

ஒடிசா நீதிமன்றத்தில் பொது நல மனு (Public Welfare Petition) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 24ம் தேதி கொரோனாவைத் தீர்க்குமா சிவப்பு எறும்பு சட்னி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி நீதிபதிகள் பி.ஆர்.சரங்கி மற்றும் பிரமாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆயுஷ் அமைச்சகம் (Division Bench Ministry of AYUSH), மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு மூன்று மாதங்களில் பதில் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

Red Ant Chutney Corona Virus Covid-19 சிவப்பு எறும்பு சட்னி கொரோனா வைரஸ்
English Summary: Red ant chutney to cure corona! Information in the study!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
  2. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!
  3. Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
  4. வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
  5. வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!!
  6. வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!
  7. டிராக்டர் பேரணியில் வன்முறை! போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ்!
  8. நாமக்கல் மாவட்டத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்!
  9. கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
  10. Shock Report : பெங்களூரு ஏரி அருகே விளைந்த காய்கறிகளில் விஷம்! - அதிகரிக்கும் உலோகங்கள்!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.