மீன்கள் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. மீன்களின் வெளிப்பகுதி முழுவதும் உள்ள வழவழப்புத்தன்மை, நோய்க்கிருமிகளை உடலுக்குள் நுழையாதவாறு ஓர் தடுப்பு சுவராக அமைத்திருப்பது மட்டுமல்லாமல், நோய் காரணிகளை எதிர்க்கும் சக்தியையும் கொண்டுள்ளது. ஒட்டுண்ணிகள் மீன்களின் உடம்பில் நுழையும்போது, அவற்றை காப்புறையிட்டு மூடிவிடுதலும், செயலிழக்கச் செய்து விடுதலும் மீன்கள் இயற்கையாகப் பெற்றிருக்கும் பாதுகாப்பு வழிகளில் ஒன்றாகும்.
இவ்வாறு இயற்கையான சில நோய் எதிர்ப்பு மற்றும் தற்காப்புத் தன்மைகளை பெற்றுள்ள மீன்களை குளத்தில் இருப்புச் செய்து வளர்க்கும் போதில் அவற்றுக்கு அதிகமாக இடப்படும் உரம் மற்றும் கழிவுகள், மீதமான செயற்கை உணவுகள், மீன்களின் கழிவுகள் அனைத்தும் அதிகரிக்கும் போது நீரின் தரம் குறைகிறது. இத்தகைய சூழலில் மீன்களுக்கு ஒரு வகையான அழுத்தம் (Stress) ஏற்பட்டு பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சாணங்களால் ஏற்படும் நோய்களுக்கும், ஒட்டுண்ணிகளின் தாக்குதலுக்கும் இலக்காகின்றன.
நீரின் தரம் பாதிப்பது மட்டுமன்றி, அவைகளை அடிக்கடி பிடித்து கையாள்வது, உயிர்வளி (பிராணவாயு) குறைவு, மீன்களின் உடலில் வழவழப்புத்தன்மை, கடுமையான வெப்ப நிலைமாற்றம், நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தி நின்று விடுதல் போன்ற காரணங்களாலும் மீன்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. இச்சூழலில் முறையான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளாவிடில் நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் தாக்குதல் மற்ற மீன்களுக்கும் பரவி, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
மேலும் படிக்க:
FMC-இந்தியா: கரும்பு விவசாயிகளுக்கான பிரேத்யேக தயாரிப்பு
பாதிப்பின் அறிகுறிகள்:
* இயல்பு நிறம் மாறி மீன்கள் சாம்பல் அல்லது நீல நிறமாக காணப்படும்.
* துடுப்புகள் சிதைந்து அரிக்கப்பட்டிருக்கும், அவற்றில் மடிப்புகளும் காணப்படும்.
* குளத்தின் அடியிலோ அல்லது ஓரங்களிலோ அடிக்கடி உராயும், நீரின் மேற்பரப்பில் வந்து நீரை வாலால் அடித்து விட்டுச் செல்லும்.
* உடலின் வெளிப்பாகத்தில் பரவலாக ‘வியர்வைத் துளிகள்’ போல் இரத்தம் வெளிப்படும்.
* சதைப்பகுதிகளில் பருக்கள், காயங்கள் அல்லது புண்கள் காணப்படும்.
* மீனின் கழிவு நூல் போல ‘திப்பி திப்பியாக’ வெளிப்படும்.
* செவுள்களில் இரத்தம் உறைந்து, கருப்புக்கோடுகள் போல காணப்படும்.
* செவுள்கள் தங்கள் செந்நிறத்தை இழந்து, வெளுத்துக் விடும்.
* மீன்கள் சுவாசிக்க சிரமப்படும், இதன் அறிகுறியாக செவுள் மூடிகளை வேகமாக அசைத்துக் கொண்டே இருக்கும்.
* உடலின் வெளிப்பாகங்களில் வீக்கம் காணப்படும்.
* வழக்கத்திற்கு மாறாக சரியாக உணவு உண்ணாதிருக்கும்.
இந்த அடையாளங்களில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் அதர்க்கான நோயை கண்டறிந்து தக்க சிகிச்சை மூலம் குணப்படுத்தவேண்டும்.
மேலும் படிக்க:
மகாராஷ்டிரா மாநில தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற தமிழக மாணவி
Share your comments