1. கால்நடை

கால்நடை வளர்ப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

KJ Staff
KJ Staff
Livestock Estrus cycle

எல்லா உயிரினங்களும் இந்த உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதையும் தன் இனத்தை விருத்தி செய்வதையும்  முக்கிய பணிகளாகக் கொண்டுள்ளன.  "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" எனும் பழமொழிக்கு ஏற்ப மாடுகள் சினைப்பருவத்தில் இருக்கும் போதே அவற்றை இனச்சேர்க்கைக்கு அல்லது கருவூட்டலுக்கு உட்படுத்த வேண்டும்.  மாடு, எருமைகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வரும். இதனையே சினைப்பருவ சுழற்சி என்கிறோம்.

சினைப்பருவம்

​மாடுகள் மற்றும் எருமைகளில் சினைப்பருவம் 18 முதல் 24 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். ஏனவே, இந்த காலத்தில் பண்ணையாளர்கள், விவசாயிகள் மாடுகளை நாளொன்றுக்கு 4-5 முறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  ஒரு வேளை இந்த நாளில் மாடுகளின் சினைப்பருவத்தை கண்டறிய தவறினால் விவசாயிகள்  ஒரு சுழற்சி காலத்தை (18-21 நாட்களை) இழக்க நேரிடும்.  ஏனவே, சினைப்பருவ அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது இன்றியாமையாததாகும்.

Cattle Estrus signs

சினைப்பருவ அறிகுறிகள்

  • ​மாடுகள் அமைதியின்றி காணப்படும்.
  • தீவனத்தின் மீது நாட்டமின்றி தீவனம் எடுப்பது குறைந்து காணப்படும்.
  • ​மாடுகள் தங்களின் அடிவயிற்றிலிருந்து அடிக்கடி கத்தும்.
  • ​கறவை மாடுகாக இருப்பின் பால் உற்பத்தி தீடீரென குறையும்.
  • ​மாடுகளின் யோனி மடல் சுருக்கமின்றி சற்று தடித்து வீங்கிக் காணப்படும்.
  • ​அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.
  • ​மாடுகளின் யோனியில் இருந்து கண்ணாடி போன்று வழவழப்பான திரவம் வெளியேறும். 
  • ​பிற மாடுகளின் மீது தாவும்; பிற மாடுகள் இப்பசுவின் பின்புறம் ஏறும் போது நகராமல் நிற்கும்

மாடுகளை சினைப்படுத்துதல்

​மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குப் பின் அவற்றை காளைகளோடு சேரவோ அல்லது செயற்கை முறை கருவூட்டலுக்கோ உட்படுத்தலாம்.  பொதுவாக மாடுகள் காலையில் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அன்றைய தினம் மாலையும், மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் அதற்கடுத்த நாள் காலையிலும் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.

​மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குப் பின்பு தான் கருமுட்டை வெளிப்படும்.  எனவே, அந்த நேரத்தில் உயிரோட்டமான விந்தணுக்கள் இருத்தால் மட்டுமே மாடு சினை பிடிக்கும். மாடுகள் சினையாக இருக்கும் போது 18-21 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிக்கு வராது; எனவே, சினைப்பருவ அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

​மாடுகளை உன்னிப்பாய் நோக்குவோம்.
சினைப்பருவத்தை சரியான நேரத்தில் கண்டறிவோம்.
​வருடம்  ஓர் கன்று எனும் இலக்கை அடைவோம்.

Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-07.

English Summary: Do you know how to Detect Heat and Timing of Insemination for Cattle?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.