கொங்கு மண்டலத்தில், மலைக்காலங்களில் வளரும் கொலுக்கட்டான் புல் சூழ்ந்த கொரங்காடு பகுதியில், மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது கயிற்றால் கட்டத் தேவையில்லை.
கொரக்காடு
-
கொங்கு பகுதியில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் கொரங்காடு. இங்கு வடகிழக்கு பருவமழை, தென் மேற்கு பருவமழை காலங்களில் கொரங்காடுகளில் கொலுக்கட்டான் புல் எனப்படும் ஒருவகை தீவனப் புல் அடர்ந்து வளர்ந்து நிற்கும்.
-
இப் புல்லில் உள்ள நுண்ணூட்டச் சத்துதான் காங்கேயம் கால்நடைகளின் திடகாத்திரமான வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.
-
கொரங்காடுகளை சுற்றி நான்கு பக்கங்களிலும் கிழுவன் வேலி இருக்கும்.
இதனால் கொரங்காடுகளில் மேயும் கால்நடைகளை கயிற்றால் கட்டி மேய்க வேண்டிய தேவை இல்லை.
-
மாடுகள் தானாக மேய்ந்து விட்டு மர நிழலில் வைத்திருக்கும் கல் தொட்டியில் இருக்கும் நீரை அருந்தி ஓய்வெடுக்கும்.
-
அந்த வகையில் காங்கேயம் அருகிலுள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் கொரங்காட்டில் இன்றும் மாடுகள் கயிற்றில் கட்டப்படாமல் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.
மேலும் படிக்க...
அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!
வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?
Share your comments