முயல் மசால் நேராக வளரக்கூடியது. இதன் தாயகம் பிரேசில் ஆகும்.
இது 0.6 முதல் 1.8 மீ வரை வளரக் கூடியது.
வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரும் தன்மை படைத்தது.
வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய முயல் மசால், குறைந்த அளவு மழை பெறும் (450-840 மிமீ) பகுதிகளிலும் வளரும்
பல்வேறு விதமான மண் வகைகளிலும் முயல் மசால் வளரக்கூடியது.
முயல் மசாலில் உள்ள புரதத்தின் அளவு 15-18 சதவிகிதமாகும்
முயல் மசால் நன்கு வளரக்கூடிய பருவம் – ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை.
30 x 15 செ. மீ வரிசையாக விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 6 கிலோ என்ற அளவிலும், தெளித்தல் முறையின் மூலம் விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவிலும் விதைகள் தேவைப்படும்.
விதைப்பு செய்து 75 நாட்கள் கழித்து, முயல் மசால் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த அறுவடைகள் இத்தீவனப் பயிரின் வளர்ச்சியனைப் பொருத்தது.
முதல் வருடத்தில், பயிரின் வளர்ச்சி குறைவாகவும், அதன் உற்பத்தியும் குறைவாகவும் இருக்கும்.
முயல் மசால் விதைப்பு செய்து ஒரு வருடம் ஆன பின்பு அதன் விதைகளே கீழே விழுந்து முளைத்து விடுவதால், ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் 35 டன்கள் வரை முயல் மசால் அறுவடை செய்யலாம்.
English Summary: Drought tolerant Livestock feed - Muyal MasalPublished on: 03 December 2018, 01:26 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments