1. கால்நடை

மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலி-கனமழை பரிதாபம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Electricity kills cows - Heavy rain awful!

Credit : Dinamalar

சென்னையில் பெய்த அதி கனமழையின்போது, மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளக்காடானது (Flooded)

அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  காரணமாக, 
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தக் கனமழையால் நகரின் பலப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகமாகியிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேங்கி நின்ற மழைநீர் (Rain Water) மற்றுமொரு சோகச் சம்பவத்துக்கு காரணமாகியிருக்கிறது. மழைநீரில் கால் வைத்த கால்நடைகள் மின்சாரம் தாக்கி பலியாயின.

கால்நடை விவசாயி

சென்னையில் தாழ்வான பகுதியான மேடவாக்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ஆதிகேசவன். இவருக்கு வாழ்வாதாரமே அவர் வளர்த்து வரும் மாடுகள்தான். ஆதிகேசவனின் ஐந்து கறவை மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டன. ஆனால், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மழையால் நிகழ்ந்த துயரம்

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் கால்நடைகளை இழந்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ள ஆதிகேசவனைப் போல மழையினால் பலரும் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தேங்கி நிற்கும் மழை நீரில் (Chennai Rain) மின்சார கேபிள் விழுந்துவிட்டதாக மேடவாக்கம் பாபு நகரில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த விஷயம் சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. விஷயம் தெரிந்த பால் விற்பனையாளர் ஆதிகேசவன் தண்ணீரில் இறங்காமல் ஒதுங்கி நின்றார். ஆனால், அவரது கால்நடைகள் தண்ணீரில் கால் வைத்ததுமே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

மின்சாரம் துண்டிப்பு

இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்த மாடுகளின் சடலங்களும் மீட்கப்பட்டன.
மழை, பெய்யும் போது மட்டுமல்ல, அதன் பிறகும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு கறவை மாடுகள் பலியாகியிருப்பதும் சிறந்த உதாரணம்.

மேலும் படிக்க...

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!

English Summary: Electricity kills cows - Heavy rain awful!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.