மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி, 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம், இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம், இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இத்ந தடைகாலம் ஜூன் 14ம் தேதி வரையில், 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடைகாலமானது ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 61 நாட்கள் இருந்த நிலையில், மத்திய அரசின் கால அவகாசத்தின் பேரில், இது பின்னர் மாற்றியமைக்கப்பட்டது. தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வந்தது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல், தமிழகத்திலும் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்த மீன்பிடி தடைகாலம் காரணமாக, மீனவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அவர்கள் இந்த சவாலை ஏற்க தயாராகி வருகின்றனர். எனவே, மீனவர்கள் தங்களின் விசைப் படகுகளை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, என்னெரமும் கடல் அலையை கீழித்துக் கொண்டு முன்னெறி செல்லும் விசைப்படகுகள் ஸ்டம்பிக்க உள்ளன. கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படும். மேலும், மீனவர்களும் தங்கள் விசை படகுகளை வர்ணம் பூசி, பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட சரியான நேரமாகும். அத்துடன், இந்நேரத்தில் வலைகளை சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபடுவது வழக்கமாகும்.
இந்நிலையில், ஏற்கனவே ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட மீனவர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது. இதனால், இந்த காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு ஒவ்வொரு மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
கருகருவென முடி வளர, இதை ட்ரை செய்தீர்களா!
2700 கோடி செலவில் அரிசி விநியோகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Share your comments