குடும்ப செலவின் தேவைக்காக ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருவதாகக் கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (O.S. Maniyan), விவசாயிகள் கால்நடை வளர்ப்பை உபத்தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்
விலையில்லா வெள்ளாடுகள்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த குரவப்புலம், மருதூர் வடக்கு ஊராட்சிகளில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் (goats) வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை (Handloom and Textile Department) அமைச்சர் ஓ.எஸ். மணியன் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். ஆட்டுப்பால் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் தான் காந்தியடிகள் ஆட்டுப்பால் குடித்தார் என்றும் கூறினார்.
ஆடு வளர்க்கும் அமைச்சர்:
ஆடு வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடிய தொழில். நானும் வீட்டில் பரண் அமைத்து ஆடு வளர்க்கிறேன். மேலும் மாடு மற்றும் கோழிகளையும் வளர்த்து வருகிறேன். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் (Income) குடும்பத் தேவைக்கு உதவுகிறது. பல நேரங்களில் நமக்கு மன அழுத்தம் ஏற்படும் நிலையில், வீட்டில் வளரும் நாய், ஆடு, மாடு மற்றும் கோழிகளை பார்க்கவும் போது, பதட்டம் குறைந்து மன அமைதி உண்டாகும்.
1 நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!
ஆடு வளர்ப்பு வருமானத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமக்கு மன அமைதியையும் கொடுப்பதால், அனைவருக்குமே ஏற்றத் தொழிலாக உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கால்நடை வளர்ப்பை உபத்தொழிலாக மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!
Share your comments