பசுக்களை பாதுகாப்பதற்காக புண்ணியகோடி என்ற புதிய திட்டத்தை கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளது. இது அரசு ஊழியர்கள் பசுக்களைத் தத்து எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.
கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தின விழாவில் முதல்வர் கலந்துகொண்டு பேசுகையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
புண்ணியகோடி திட்டத்தில் ’ஏ’ மற்றும் ’பி’ பிரிவு அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் பசுக்களை வாங்கலாம். இதற்கு வருடாந்திர கட்டணமாக 11,000 ரூபாய் செலுத்த வேண்டும்.புண்ணியகோடி திட்டத்தின் கீழ் பசுக்களைத் தத்தெடுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இருப்பதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ரூ.50 கோடி நிதி
ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களை தத்தெடுப்பதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர், மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாப்பது மக்களின் உரிமை எனவும், மக்களின் பங்களிப்பு இதற்கு மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
சான்றிதழ்
இத்திட்டம் அரசு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'புண்ணிய கோடி தத்து' போர்டலில் உள்ள, ஏதாவது ஒரு கோசாலைகளின் ஒவ்வொரு மாட்டுக்கும், தலா 11 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மாடுகளை தத்தெடுக்கலாம். தத்து எடுப்போருக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.மாநிலத்தில் மொத்தம் 215க்கும் மேற்பட்ட, தனியார் கோசாலைகளில் மாடுகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளன.
100 அரசு கோசாலைகளில்
100 அரசு கோசாலைகளில், படிப்படியாக தத்தெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோசாலைகளில் வயதான மாடுகள், ஆதரவற்ற, நோயால் பாதிக்கப்பட்ட, விவசாயிகளால் வளர்க்க முடியாமல் கொண்டு வந்து விடப்படும் மாடுகள் உட்பட, அனைத்து மாடுகள், கன்றுக்குட்டிகளுக்கு அடைக்கலம் தரப்படும்.
நன்கொடை
பொது மக்கள், தங்களின் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில், தங்கள் சக்திக்கேற்ப கோசாலைகளுக்கு நன்கொடை வழங்கலாம். பசுவதைத் தடை சட்டம் அமலுக்கு வந்த பின், இதுவரை 20 ஆயிரம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும், கர்நாடக மாநிலத்தில் மாடுகளுக்கு, தீவன பற்றாக்குறை இல்லை. மாடுகளுக்கு நோய் தடுப்பூசி போடும் திட்டமும் சிறப்பாக நடக்கிறது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments