1. கால்நடை

இனச்சேர்க்கைக்கு சரியான காளைகளை தேர்வு செய்வது எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

kangeyam bull

நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி முத்தூரில் வசிக்கும் கார்வேந்தன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இனச்சேர்க்கைக்கு சரியான காளையினை தேர்வு செய்வது எப்படி? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? போன்ற பல தகவல்களினை கிரிஷி ஜாக்ரனுடன் கார்வேந்தன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டதில் சில முக்கிய விவரம் பின்வருமாறு-

இனச்சேர்க்கைக்கு தேர்வு செய்யக்கூடிய காளையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது காளையின் சுழி விவரங்களை தான் என்றார். நெத்தியில் ஒரு சுழி தான் இருக்க வேண்டும். கொம்புக்கு நடுவில் சுழி போய்விட்டால் அதனை கொண்டை சுழி என்பார்கள், அவை இனப்பெருக்கத்திற்கு சரியான காளை அல்ல. அதைப் போல் கொம்புக்கு பின்னால் ஒரு சுழி , அதுவும் கொம்புவிலிருந்து நான்கு விரல்களுக்குள் அடங்கும் அளவில் அந்த சுழி இருத்தல் வேண்டும். சுழி இல்லையென்றாலும் பிரச்சினையில்லை, ஆனால் ஜோடி சுழி இருத்தல் கூடாது.

வால் பகுதி எப்படியிருக்க வேண்டும்?

அதன்பின் திமிலுக்கு பின்னால், ஐந்து விரல்களை வைத்தால் அதற்கு பின் சுழி இருக்கலாம். முதுகில் வேற எங்கும் சுழி இருக்கக் கூடாது. அப்படியிருப்பின் அவற்றை இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யாமல் தவிர்க்கலாம். வாலிலும் சுழி இருக்கக்கூடாது. வாலின் நீளமானது, காலின் முளி முட்டும் அளவிற்கு இருத்தல் வேண்டும். மேலும், வாலின் தோகையில் வெள்ளை நிற முடி இருத்தல் கூடாது. அடர் கருமையான முடியினை கொண்டிருத்தல் வேண்டும்.

தொப்புள் அதிகளவில் தொங்கக்கூடாது. விதைப்பையில் இரண்டு விதைகள் தெளிவாக இருக்க வேண்டும். அதுவும் பாதி கருப்பு, பாதி சிகப்பு என்கிற நிறத்தில் தான் இருக்க வேண்டும். முதுகெலும்பானது இருப்புறத்திலும் நல்ல வளர்ச்சியுடன் இருத்தல் வேண்டும். புறமாடு (மாட்டின் பின்புறம்) பகுதி அகலமாக இருக்க வேண்டும்.

பற்களின் எண்ணிக்கையும் முக்கியம்:

முகம் சின்ன முகமாக இருக்க வேண்டும். நெத்தியானது பலகைப் போல் அகலமாக இருக்க வேண்டும். தாடை வந்து அறுந்தாடை போன்று இருக்க வேண்டும். பாதக் குளம்பு மிகவும் விரிந்து இருக்கக்கூடாது. நெஞ்சு அகலமாக இருக்க வேண்டும். எண்ணிக்கையில் 8 பற்கள் தெளிவாக இருக்க வேண்டும். 6,7 என்று எண்ணிக்கையில் பற்கள் இருக்ககூடாது. காது அறுங்காதாக இல்லாமல், சிறிய அளவில் இருத்தல் வேண்டும்.

வண்ணங்களைப் பொறுத்த வரை, முதுகில் கருப்பு அடித்திருக்க வேண்டும். அதைப்போல் கால் கருப்பு நிறத்தில் இருப்பதும் ரொம்ப முக்கியம். வயிறு பகுதியைப் பொறுத்த வரை, அந்த இனத்திற்கு ஏற்ற நிறத்தை கொண்டிருக்க வேண்டும். கடக்கண் அருகே புள்ளிகள் இருத்தல் கூடாது. இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தும் காளைகளின் நெற்றியில் இரண்டு, மூன்று முறை கைகளால் நீவி நுகர்ந்து பார்த்தால் நாட்டுச் சர்க்கரை வாசம் வரும்.

மேற்குறிப்பிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தினால் தான், இனச்சேர்க்கை மூலம் தொடர்ச்சியாக நல்ல காங்கேயம் இனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல இயலும் என்றார் கார்வேந்தன். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காளை வளர்ப்பில் கார்வேந்தன் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read also: Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன?

இனப்பெருக்கத்திற்காக காளையினை வளர்த்தாலும், அவற்றை லாப நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் கார்வேந்தன்.

தரமான காங்கேயம் கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் இனச்சேர்க்கைக்கு கார்வேந்தன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம்.தொடர்பு எண்: 98654 89317

Read more:

3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா?

20 ஆண்டுகளாக KVK மூலம் தொடர் பயிற்சி- முன்னோடி விவசாயியாக திகழும் ஒண்டிமுத்து!

English Summary: How to choose the right Kangeyam bulls for mating

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.