ஆடுகளில் விந்தணுக்கள் நகராமல் ஆண் உறுப்பிலேயே தங்கி விடுவதால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. இப்பிரச்சனை அதிக தீவனம் அளிப்பதால் ஏற்படுகிறது. அதிக வெப்பமும், பனியும் கூட விந்தணுவைப் பாதிக்கலாம். விந்தணுவின் செயல்படும் நேரம் 63-160 நொடிகள். இது காலத்தைப் பொருத்து மாறுபடலாம். செயற்கை சினைப்பை மூலம் அதிகமாக விந்தணு பெறப்பட்டாலும் மின்சாரத்தூண்டல் முறையே சிறந்ததாகும். கிடாவின் விந்தணு குளிரால் அதிகம் பாதிப்படையும். 1:10 அல்லது 1:15 என்ற விகிதத்தில் விந்தணு திரவங்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும். மேலும் சல்ஃபர் கூட்டுப்பொருள்கள் போன்ற நோய் எதிர்ப்பொருட்களைப் பயன்படுத்தி விந்துக்களை நீண்டகாலம் பாதுகாக்கலாம். பொதுவாக 4 முறை உட்செலுத்தலாம். இது இடம் மற்றும் இனத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. தற்போது உறைய வைத்துப் பாதுகாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. எடுத்துக் கொள்ளும் விகிதம் 93 சதவிகிதம் ஆகும். சரியாகப் பாதுகாக்கப்படாத விந்தணுக்கள் ஆரோக்கியமான ஆட்டு குட்டிகளை ஈனுவதற்கு உதவாது..
சினைத்தருண அறிகுறிகள்
1) அமைதியிழந்து, நிலை கொள்ளாமல் அலைந்து கொண்டிருக்கும்.
2) அடித்தொண்டையில் கத்தும்.
3) அடுத்த ஆடுகள் மீது தாவுவதுடன், மற்ற ஆடுகள் தன் மேல் தாவ அனுமதிக்கும்.
4) வாலைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருக்கும்.
5) வெளிப்புற பிறப்பு உறுப்பு சிவந்தும், வீங்கியும் காணப்படும்.
6) பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவ ஒழுக்கு காணப்படும்.
7) பால் உற்பத்தி குறையும்.
கிடா ஆடு தெரிவு
கிடா ஆட்டைத் தெரிவு செய்யும் போது அவ்வினத்தின் பெட்டை ஆடுகளின் பால் உற்பத்தித் திறனை அறிந்து தேர்வு செய்யவேண்டும். பால் உற்பத்தி நாளொன்றுக்குக் குறைந்தது 1.5 லிட்டர் ஆவது இருக்கவேண்டும். ஆடு கால்கள் நேராகவும் ஆண்மைத் தன்மையுடன் நீளமாகவும் இருத்தல் வேண்டும்.
இரண்டு அல்லது 3 குட்டிகளில் ஒன்றாக இருக்கலாம். கிடா நன்கு விந்தணு வளர்ச்சியுடன் இனச்சேர்க்கைக்குத் தயாராக இருக்கவேண்டும். 10-12 மாதங்கள் வயது இருக்கவேண்டும்.
பருவத்திற்கு வரும் வயது : 5 - 7 மாதங்கள்
1) கிடா மற்றும் பெட்டைக் குட்டிகளைப் பிரிக்கும் வயது – 3 - 5 மாதங்கள்
2) விந்தணு சேகரிக்க பயிற்சியளிக்கும் வயது - 9 மாதங்கள்
3) கிடாவை கலப்பிற்கு பயன்படுத்தும் அதிகபட்ச வயது – 6 - 8 வருடங்கள்.
ஆடுகளில் செயற்கைக் கருவூட்டல்
வெள்ளாடுகளில் கிடாக்கள் மலட்டுத்தன்மை அடைவதால் செயற்கைக் கருவூட்டல் அவசியமாகிறது. ஜெர்மனி மற்றும் நெதர்லேண்ட் நாடுகளில் 1950களில் இருந்தே இம்முறை பின்பற்றப்படுகிறது. நடுத்தர வயது ஆடானது 1-3 மி.லிருந்து 6 மி.லி. திரவத்தில் இருக்கும் விந்தணுக்களே போதுமானது. விந்தணுவானது வெள்ளையிலிருந்து எலுமிச்சை நிறம் வரை நிறத்திலும் அடர்த்தியிலும் வேறுபடுகிறது. விந்தணுக்களின் திறனுக்கேற்ப நேரடிக் கலப்பை விட செயற்கைக் கருவூட்டலே சிறந்தது. ஒரு மி.லி திரவத்தில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையை அறிவது அவசியம். ஒரு சிறந்த கருவூட்டலுக்கு ஒரு மில்லி திரவத்தில் 2000x106 விந்தணுக்கள் (ஸ்பெர்மட்டோசோவா) இருத்தல் நலம்.
சினை ஆட்டைத் தயார் செய்தல்
சினைக்காலம் முழுவதும் நல்ல தீவனமும் பராமரிப்பும் அளிக்கப்பட்டு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்.
குட்டிகள் வயிற்றுக்குள் நன்கு வளருமாறு அதற்கு கவனம் அளித்தல் அவசியம்.
பயிற்சி
சாதாரணமாக செய்வதைப்போலவே சினைக்காலத்திலும் ஆடுகளுக்கு பயிற்சி அவசியம். ஆனால் கிடா போன்ற பிற ஆடுகளுடன் உலவ அனுமதித்தல் கூடாது. கடைசி இரு மாத சினைக் காலத்தில் ஆடுகளுக்குக் குட்டியைத் தாங்கி நிற்க அதிக வலு தேவைப்படும். அதற்கேற்ப பயிற்சியும், தீவனமும் அவசியம்.
ஊட்டச்சத்து
சினை ஆடுகளுக்கு கடைசி இரு மாதத்தில் தான் குட்டிகள் 70 சதவிகிதம் எடை பெறுகின்றன. எனவே இந்த சமயத்தில் முறையான தீவன கவனிப்பு அவசியம். இல்லையெனில் குட்டிகள் குறைந்த எடையுடனோ அல்லது இறந்தோ பிறக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சமயத்தில் நன்கு அடர் தீவனம் அளிக்கவேண்டும். மேலும் கருப்பை விரிந்து வயிறு முழுவதும் அடைத்துக் கொள்வதால் நிறையத் தீவனமும் ஆட்டினால் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே சரியாக கவனித்து நன்றாக தீவனம் அளிக்கவேண்டும்.
சினையாக இருக்கும் போது ஆடுகள் உள்ளே சேகரித்து வைத்துள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட் முழுவதும் குட்டிகளுக்கு கொடுத்து விடும். எனவே அதற்குத் தேவையான அளவு உணவைக் குறிப்பாக நல்ல தரமுள்ள உலர் தீவனம் அளித்தல் அவசியம். சினைக்காலத்தில் நல்ல உலர் தீவனம் அளித்தால் தான் குட்டி ஈன்றபின் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
அதே போல், புரதம் கலந்த அடர் தீவனம் கொடுக்கவேண்டும். அடர் தீவனம் அதிகமாகக் கொடுத்தாலும் கன்று ஈனுதல் மெதுவாகவும், செரிப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும். எனவே 16-17 சதவிகிதம் புரதம், சிறிது உப்பு மற்றும் தாதுக்கள் கலந்த கலப்பு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
தடுப்பு முறைகள்
1) குட்டி ஈனுவதற்கு 1 மாதம் முன்பு குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.
2) கிளாஸ்டிரிடியம் பரீஃபிரிஞ்ஜென்ஸ் ‘சி’ மற்றும் ‘டி’ தடுப்பூசி அளித்தல் வேண்டும். டெட்டானஸ் ஊசி குட்டி ஈனுவதற்கு 2 வாரங்கள் முன்பே அளித்துவிடவேண்டும்.
3) இரத்த விஷத்தன்மை ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என சோதித்துக் கொள்ளவேண்டும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments