1. கால்நடை

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

KJ Staff
KJ Staff
Chicken
Credit : Vikatan

கிராமங்களில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பின்றி புறக்கடை முறையில் வளர்க்கப்படுகின்றன. இரவில் கூடை, பஞ்சாரம், மரத்தாலான கூண்டு அல்லது திண்ணைக்கு கீழ் உள்ள இடத்தில் அடைத்து வைத்து காலையில் கோழிகளை திறந்து விடுவர். இவை வீட்டைச் சுற்றிலும் உள்ள குப்பை கூளங்களை கிளறும். சிந்திய தானியங்கள், புழு, பூச்சிகள் (Pest) மற்றும் இலை தழைகளை உண்ணும். சில நேரங்களில் நெல், சோளம் (Maize), கம்பு, கேழ்வரகு, அரிசி குருணையை உணவாக கொடுப்பர். இவற்றை எளியமுறையில் கூண்டிலும் அடைத்து லாபம் (Profit) பார்க்கலாம்.

கூண்டு அமைக்கும் முறை

கூண்டு முறையில் நாட்டுக் கோழிகளை வளர்க்க 6 அடி நீளம், 4 அடி அகலம் 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல கம்பிகளால் ஆன கூண்டு தயாரிக்க வேண்டும். இரும்பு (Iron) சட்டத்தில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் பொருத்தினால் கூண்டில் அவை எச்சமிடும் போது கீழே உள்ள தட்டில் சேகரித்து அகற்றலாம். நீள, அகலத்தின் நடுவில் 2 அடியில் கம்பி வலையால் தடுப்பு அமைத்தால் நான்கு அறைகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு அறைக்கும் மத்தியில் தாழ்ப்பாளுடன் சிறிய கதவு பொருத்த வேண்டும். மேற்கூரை இரும்பால் செய்து கூரையின் விளிம்பு பக்கவாட்டில் இருபுறமும் முக்கால் அடி நீட்டுமாறு இருக்க வேண்டும். இந்தக் கூண்டை வராண்டாவிலோ, அதிகம் புழங்காத அறையிலோ வைக்கலாம். தீவனம் (Fodder) மற்றும் தண்ணீரை அதற்கு உண்டான தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம். ஒவ்வொரு அறையிலும் 10 நாட்டுக் கோழிகள் வீதம் 40 கோழிகளை ஒன்றரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம்.

தடுப்பூசி

கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாகப் பிரித்து ஒரு கூண்டை 2 அடுக்குகள் மற்றும் 8 அறைகள் கொண்ட கூண்டாக மாற்றினால் 80 கோழிகளை குஞ்சு பொரித்தது முதல் 5 மாதங்கள் வரை வளர்க்கலாம். ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்தால் லாபம் (Profit) கூடுதலாக கிடைக்கும். காகம், பருந்து, வல்லூறுகளால் கோழிக்குஞ்சுகளின் இறப்பு விகிதம் (Death Rate) தவிர்க்கப்படும். 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்க்கலாம். இதில் இறப்பு விகிதம் 4 சதவீதத்திற்கும் குறைவு தான். சுகாதாரமான (Hygienic) முறையில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுக்கலாம். வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசிகளை (Vaccines) 7வது நாள் மற்றும் 8வது வாரத்தில் செலுத்தினால் கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி போடுவதும் மிக எளிது தான். தேவைப்படும் போது கோழிகளின் அலகுகளை வெட்டுவது சுலபம். வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது. குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக உடல் எடை கிடைக்கும். சரியான சத்துகளுடன் அடங்கிய அடர்தீவனம் கொடுத்தால் மூன்று மாதங்களில் ஒரு கிலோ உடல் எடை கிடைக்கும்.

ஒரு கிலோ உடல் எடை வளர 3 முதல் 3½ கிலோ தீவனம் உட்கொள்ளும். மற்றவர்களுக்கு தொந்தரவு இன்றி நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம். இந்த முறையில் கிராமப்புற மகளிர், மற்றும் இதர பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை சம்பாதிக்கலாம்.

தொடர்புக்கு

பேராசிரியர் உமாராணி
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்
திருப்பரங்குன்றம்,
மதுரை - 5
போன்: 0452 - 248 3903.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க கால்நடை மருத்துவர் அறிவுரை!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

English Summary: If Chicken is reared in cage system, extra profit! Published on: 26 January 2021, 06:57 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.