1. கால்நடை

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கான சிறந்த தொழில் ஐடியா!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வேளாண் வணிகம் என்பது இன்றைய காலகட்டத்தில் லாபம் தரும் தொழிலாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே படித்த பல இளைஞர்களும் வேளாண் சார்ந்த வணிக தொழில்களில் ஈட்டுப்பட்ட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் குறைந்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் தரும் தொழிலாகப் பார்க்கப்படுவது கோழி வளர்ப்பு. கோழிப் பண்ணை தொடங்க தேவைப்படும் வணிக யோசனைகள் குறித்து இங்கே அறிந்துகொள்வோம்...

கோழிப் பண்ணை அமைக்க அதிக முதலீடு தேவை இல்லை குறைந்தது 1 லட்சம் போதும், இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் நீங்கள் லாபம் சம்பாதிக்கலாம்.

கோழிப் பண்ணை அமைக்கத் தேவைப்படும் முழு வழிமுறைகள் இங்கே!!

  • முதலீடு தொகை : நீங்கள் ஒரு சிறு அளவிலான கோழிப் பண்ணை அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும்.

  • நடுத்தர அளவிலான கோழிப் பண்ணைக்கு, 1.5 முதல் 4 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும்.

  • பெரிய அளவிலான கோழிப் பண்ணையை நீங்கள் 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்.

கோழிப் பண்ணை அமைக்க நீங்கள் வங்கிகளிருந்து கடன் வசதி பெறமுடியும், பெரும்பாலான வங்கிகளில் கோழி வளர்ப்பு உள்ள வேளாண் சார்ந்த தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு சில ஆவணங்கள் மட்டும் சமர்ப்பித்தால் போதும்.

கோழி வளர்ப்புக்கு கடனுதவி வழங்கும் சிறந்த வங்கிகள்! - தகுதி உள்ளிட்ட முழு விபரங்கள் உள்ளே!!

கடன் பெறத் தேவைப்படும் ஆவணங்கள்

  • முழுமையான வணிகத் திட்டம்

  • அடையாள அட்டை

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

  • வணிக நில ஆவணங்கள்

  • வணிக உரிமம் மற்றும் அனுமதி

  • விலங்கு பராமரிப்பு அறிக்கைகள்

 

முறையான பயிற்சி

லாபகரமான வணிகத்திற்குக் கோழி வளர்ப்பு பற்றிய சில அடிப்படை பயிற்சியும் முக்கியமானது. கோழி வளர்ப்பில் அதிகம் லாபம் பெறக் கோழிகள் மற்றும் முட்டைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அறியப் பல நிறுவனங்கள் அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. எனவே இது போன்ற லாபகரமான தொழில்களைத் தொடங்க திட்டமிடும் போதும் இது போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது முகவும் முக்கியமாதாக இருக்கும்.

அதிக லாபம் பெற

அதிக லாபம் பெற முறையான பராமரிப்பு மற்றும் தரமான தீவனமும் முக்கியமானதாகும். மேலும் நோய் பாதிப்பிலிருந்து கோழிகளைக் காக்க மருந்துவ வசதி வழங்கப்படுவதும் அவசியம். இதனை பொறுத்தும், கோழிகளின் எண்ணிக்கை பொருத்தும் உங்களுக்கான லாபம் இருக்கும்.
உதாரணமாக நீங்கள் 1500 கோழிகளை வளர்க்கிறீர்கள் என்றால், வருடத்திற்கு 4 லட்சம் முட்டைகளை விற்கலாம், ஒரு முட்டை விலை 5 என வைத்துக்கொண்டால், ஒரு வருடத்திற்கு ஒரு நல்ல தொகையை நீங்கள் சம்பாதிக்க முடியும்.

மேலும் படிக்க

சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!

English Summary: Want to earn in lakhs ..? Here is the best business idea for you !! Published on: 26 January 2021, 11:35 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.