சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்க கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.
சீம்பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்பட்டு கன்றுகளின் முதல் மலத்தினை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.
மாடுகளைப் பொதுவாகத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கு எதிராக மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதால் அவற்றுக்கு எதிராக மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாக்கப்பட்டு அது சீம்பால் மூலம் கன்றுகளுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யலாம்.
வயது முதிர்ந்த மாடுகள் நிறைய நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் சீம்பாலில் அதிகமான காமா குளோபுலின்கள் இருக்கும்.
காமா குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உடையாமல் கன்றுகளின் குடல் வழியாக அவற்றின் உடலில் உறிஞ்சப்படவேண்டும்.
ஆனால் இந்த காமா குளோபுலின்கள் இதர புரதங்களாக உடைக்கப்பட்டு விட்டால் அவை மற்ற சாதாரணப் புரதங்களைப் போலத்தான் செயல்படும்.
புதிதாகப் பிறந்த கன்றுகளின் குடல் இந்த காமா குளோபுலின்களை முழுவதும் உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் மட்டுமே அனுமதிக்கும். இவ்வாறு அவற்றின் குடல் காமா குளோபுலின்களை உறிஞ்சும் திறன் அவை பிறந்து 1-2 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு கன்று பிறந்த 15-30 நிமிடங்களில் முதல் தவணையான சீம்பாலையும், இரண்டாம் தவணை சீம்பாலை கன்று பிறந்த 10-12 மணி நேரத்திலும் அளிக்கவேண்டும்.
கன்றுகள் பிறக்கும் போது அவற்றின் சிறு குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே இந்நிலையில் அவை பெரிய அளவுள்ள காமா குளோபுலின்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்.
கன்றின் வயது மணிக்கணக்கில் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சிறு குடலிலுள்ள உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து முதிர்ச்சி அடையத் தொடங்கும். இதன் பிறகு பெரிய அளவிலான புரத மூலக்கூறுகளை அது உறிஞ்சாது.
இவ்வாறு கன்றுகளின் சிறு குடலிலுள்ள செல்கள் முதிர்ச்சி அடைய அடைய அவற்றின் உறிஞ்சும் திறன் குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக நின்று விடும்.
இதற்கு குடல் மூடுதல் என்று பெயர். இவ்வாறு குடல் மூடும் சமயத்தில் கன்றுகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவும் கன்றின் நோய் எதிர்ப்புத் திறனும் நேர்மாறாக இருக்கும்.
குடல் மூடும் போது கன்றுகளின் குடலில் சிறிதளவு காமா குளோபுலின்களை மட்டுமே உறிஞ்சப்பட்டிருந்தால் அவற்றின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.
இதனால் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் அவற்றின் நோயினால் பாதிக்கப்படும் விகிதமும் அதிகரிக்கும்.
கன்றுகளின் உடல் எடைக்கேற்ப சீம்பாலை அவற்றின் உடல் எடையில் 1 பங்கு அளித்தல்.
கன்று பிறந்த முதல் 15-30 நிமிடங்கள் – கன்றின் உடல் எடையில் 5-8%
முதல் 10-12 மணி நேரங்கள் - கன்றின் உடல் எடையில் 5-8%
இரண்டாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
மூன்றாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
கன்று ஈன்ற மாடுகளில் சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை கறந்து விட வேண்டும். இல்லையேல் அதிகப்படியான சீம்பாலை கன்றுகள் குடித்துவிட்டால் கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.
மாடுகளிலிருந்து சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து தாயற்ற மற்ற கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.
சீம்பாலை உறைய வைத்து நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். இயற்கையாக சீம்பாலை நொதிக்க வைத்தும் 5-7 நாட்களுக்கு சேமித்தும் பயன்படுத்தலாம்.
English Summary: Importance of Colostrum milk for Young CalfPublished on: 20 November 2018, 04:26 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments