பருவமழைக் காலம் என்பதால் கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் பூஞ்சான் ஏற்படுவதைத் தடுக்கத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
-
தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில், வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடும்.
-
மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
-
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் பண்ணைகளில் தீவனம் வீணாகாமல் பாதுகாத்துக்கொள்ளும் வியூகங்களை கோழிப் பண்ணையாளர்கள் வகுக்க வேண்டும்.
-
பண்ணைகளின் உயர்மனைகள் பக்கவாட்டில் படுதாக்களை கட்டி தொங்கவிட வேண்டும்.
-
மேலும் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் ஸ்டெப்லோகாக்கஸ் கிருமிகள் ஈகோலை கிளாஸ்டிரியம் ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
-
மழைக்காலமாக இருப்பதால், தீவன மூலப்பொருள்களில் பூஞ்சை நச்சுகளின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தீவனத்தில் தகுந்த நச்சுத் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!
ரூ.25 ஆயிரம் முதலீட்டில் லட்சம் சம்பாதிக்க உதவும் பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு!
Share your comments