கரூர்: வடமாநிலங்களில் மாடுகளில் பரவி வந்த இலம்பி தோல் நோய் தற்போது தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நோய் மாட்டினங்களைத் தாக்கி அம்மை போன்ற ஒரு நச்சுயிரி நோய் ஆகும். அதைத் தொடர்ந்து தலை, கழுத்து, உடம்பு, கால்கள், மடி போன்ற அனைத்து பகுதிகளிலும் தோலில் 2-5 செ.மீ அளவுள்ள அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும்.
இதை கவனிக்காமல் விட்டால், கட்டிகள் சீழ் பிடித்து புண்ணாகி புழுக்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.
இந்நோயானது கொசு, உண்ணி, ஈக்கள் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவக்கூடியது. மேலும், பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு எச்சில், சளி, பால், விந்தணு வழியாக விரைவாக பரவக்கூடியது.
ஆகவே, இந்நோய் வராமல் தடுக்க மாட்டுக்கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மேலும், மாடுகளை கொசு போன்ற பூச்சிகள் கடிக்கா வண்ணம் பாதுகாக்க வேண்டும். உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவருக்கு தெரியப்படுத்த வேண்டும். சந்தைகளில் மாடுகள் வாங்குவதை இயன்ற வரை சில வாரங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
எனவே, கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வுடன் இந்நோய் வராமல் தங்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். உடனடியாக, கால்நடை மருத்துவரை அணுக இந்த செயலி உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
புதிதாக "கால்நடை மருத்துவர்" செயலி: இனி உடனடி தகவல் பெறுங்கள்
கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற கால்நடை மருத்துவர் செயலியை, மீன்வளம்-மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்தச் செயலியில் கால்நடை மருத்துவர் குறித்த விவரங்களை அறிந்து தங்களின் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. காணொளி தொடர்பு மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும்.
இந்த செயலி மூலம் அரசின் சிறப்புத் திட்டங்கள், அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள் பராமரிப்பு மற்றும் பண்ணை அமைத்தல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதில், 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தச் செயலி மூலம் இணைந்துள்ளனர்.
மேலும் படிக்க:
கால்நடை மருத்துவர் செயலிப் பற்றிய கூடுதல் தகவல் இதோ!
வீட்டிற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கிறது கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்
Share your comments