புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.
தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் காப்பீடு செய்ய 2 சதவிகித ப்ரிமியத் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவிகிதம் மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.
இரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.
அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.
ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.
ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகிப் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்!
Share your comments